சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கக்கட்டிகள் கடத்தல்... அதிகாரிகள் பறிமுதல் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து சென்னைக்கு கரிகாலன் என்ற தனியார் நிறுவன ஊழியர் வந்துள்ளார். அவருடைய பைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 3 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது தெரிய வந்தது.

Chennai airport custom officials seized 3 kg gold

உடனே சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த கரிகாலனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மாதத்தில் ஒருவர் தங்கக் கட்டிகளை மிக்ஸி ஜாரில் மறைத்து வைத்து எடுத்து வந்து, சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டார் என்பது நினைவிருக்கலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Customs officials seized 3 kg gold from Dubai return, private company Employee and investigation going on.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற