ரஜினி அரசியல் அறிவிப்பு.. பிரபலங்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜாதி மதம் வேறுபாடு இல்லா ஆன்மீக அரசியல் செய்ய போகிறேன் - ரஜினி அதிரடி

  சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு பல்வேறு பிரபலங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

  அரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் தனிக்கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஜினியின் அறிவிப்புக்கு பல்வேறு பிரபலங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

  சமூக உணர்வுக்கு..

  நடிகர் கமல்ஹாசன் ரஜினியின் அரசியல் வருகைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக

  ரஜினி பின்வாங்கக்கூடாது

  நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பின் மூலம் ஆனந்த அதிர்ச்சி அளித்துவிட்டார் என நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரஜினி பின் வாங்கக் கூடாது. உணர்ச்சிப் பெருக்கில் ரசிகர்கள் கட்டுப்பாடு மீறல் கூடாது. சட்டம் ஒழுங்கு முக்கியம். வாழ்த்துக்கள் என்று அவர் கூறியுள்ளார்.

  வாங்க.. வாங்க..

  ரஜினியின் அரசியல் வருகையை நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி வரவேற்றுள்ளார். அவர் தனது டிவிட்டில் வாங்க.. வாங்க.. என தெரிவித்துள்ளார்.

  தனித்து வா தலைவா

  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் ரஜினியின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். தலைவா... வா தலைவா.. தனித்து வா தலைவா.. அனைவருக்கும் தேவையான மாற்றமாக இரு.. என தெரிவித்துள்ளார்.

  எங்களுக்குதான் ஆதரவு

  எங்களுக்குதான் ஆதரவு

  ஊழலற்ற நிர்வாகத்துக்காக நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது பாராட்ட தக்கது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவளிப்பார் என நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். துணுச்சலுடன் அரசியல்களத்திற்கு வருகிறேன் என அறிவித்திருக்கும் சகோதர் ரஜினிக்கு வாழ்த்துகள்

  தலைவா.. வா..

  நடிகை கஸ்தூரியும் நடிகர் ரஜினிகாந்த்தின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். தலைவா வா என அவரது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

  தலைவா. வா. வா. வா vaaaaaaaaaaa !!!!!!!!! Hurraaaaay !!!!!

  ஆரோக்கியமான அரசியல்

  ஆரோக்கியமான அரசியல்

  அரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்த ரஜினிக்கு ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

  ஆன்மீக அரசியலுக்கு வவேற்பு

  ஆன்மீக அரசியலுக்கு வவேற்பு

  மதவாத அரசியலாக இல்லாமல், ஆன்மீக அரசியலாக இருக்கும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் அரசியல் வருகையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது என்றும் அவர் கூறினார்.

  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

  English summary
  Cinema stars and political leaders welcoming Rajinikanth political arrival. Rajinikanth going to start a political party. His party will contest in coming assembly.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற