18 எம்எல்ஏக்கள் நீக்கம் குறித்து சபாநாயகருடன் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்வது குறித்து தலைமை செயலகத்தில் சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடியார் ஆலோசனை நடத்தினார்.

முதல்வருக்கு எதிராக ஆளுநரை சந்தித்து ஆதரவை டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றனர். இதற்கு விளக்கம் கோரி சபாநாயகர் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

CM Edappadi Palanisamy discusses with Speaker

பதில் அளிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்திக்க வில்லை. மேலும் தங்கள் தரப்பு எம்எல்ஏக்கள் யாரும் சபாநாயகரை சந்திக்க மாட்டோம் என்று தங்கதமிழ் செல்வன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் அளிக்காததால் அந்த 18 பேர் மீது நடவடிக்கை குறித்து சபாநாயகருடன் தலைமை கொறடாவும், அமைச்சர்களுடன் முதல்வரும் ஆலோசனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து 18 பேரை நீக்குவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயணன் உள்ளிட்டோர் சபாநாயகருடன் ஆலோசனை நடத்தினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CM Edappadi Palanisamy and Dy CM O.Panneer Selvam discusses with Speaker. They are discussing to disqualify 18 MLAs, sources say.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற