For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை நல்ல நாடு.. அங்கு நடக்கும் கலவரம் வருத்தமளிக்கிறது.. ரவிச்சந்திரன் அஸ்வின் கவலை

இலங்கையில் நடக்கும் கலவரங்கள் வருத்தம் அளிப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் டிவிட் செய்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கையில் நடக்கும் கலவரம் வருத்தம் அளிக்கிறது - அஸ்வின்

    சென்னை: இலங்கையில் நடக்கும் கலவரங்கள் வருத்தம் அளிப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் டிவிட் செய்து இருக்கிறார்.

    இலங்கையில் சிங்கள மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 10 நாள் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கண்டியில் இந்த கலவரம் நடக்கிறது.

    Cricketer Ashwin feels bad about Sri Lanka riot

    இதனால் அங்கு கட்டிடங்கள், மசூதிகள், புத்த மத விகாரங்கள் இடிக்கப்பட்டு இருக்கிறது. பல வீடுகளை கலவரக்காரர்கள் கொளுத்தி இருக்கிறார்கள். இதில் 2 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

    அங்கு தற்போது ராணுவம் இறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் போராட்டம் நடக்கிறது. இந்த நிலையில் சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.

    இதுகுறித்து இந்திய வீரர் அஸ்வின் டிவிட்டரில் ''இலங்கையில் மிகவும் வருந்தத்தக்க விஷயங்கள் நடக்கிறது. இலங்கை மிகவும் நல்ல நாடு, அங்கு மிகவும் நல்ல மக்கள் இருக்கிறார்கள். அங்கு நடக்கும் இந்த பிரிவினை பிரச்சனை விரைவில் முடிவுக்கு வர வேண்டும். வாழ்வோம், வாழ விடுவோம். வேற்றுமைகளை புரிந்து கொண்டு கடந்து செல்வோம். நல்ல நிலை திருப்ப வேண்டிக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Cricketer Ashwin feels bad about Sri Lanka riot. In twitter he says ''What’s happening in Sri Lanka is really sad, such a lovely country with such lovely people and surely this stand off between people with different beliefs will end soon. Let’s live and let live, important to accept differences and move on. 🙏praying for normalcy soon enough'' about riot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X