ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு... இல்லையென்றால் போராட்டம் - ஜவுளித்துறையினர் கோரிக்கை: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஜவுளித்துறையினருக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஈரோடு கிளாத் மெர்சண்ட்ஸ் அசோசியேஸன் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு கிளாத் மெர்சண்ட்ஸ் அசோசியேஸனைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி தங்கள் அமைப்பின் கூட்டத்தை நடத்தினார்கள். அக்கூட்டத்தில் செயலாளர் ரவிச் சந்திரன் பேசும்போது, மத்திய அரசு ஜிஎஸ்டி வரியில் இருந்து ஜவுளித்துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஏற்கனவே நாங்கள் பலமுறை தொடர்ந்து போராட்டம் நடத்தியும் மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை.

ஜவுளித்துறையில் ஒவ்வொரு கட்டத்திலும் வரிவிதிக்கப்படுவதால் நாங்கள் வெகு சிரமத்துக்கு ஆளாகிறோம். சாயப்பட்டறை உரிமையாளர்கள் முதல்கொண்டு விசைத்தறி உரிமையாளர்கள் வரை அனைத்து சிறு, குறு ஜவுளித்துறையினர் ஜிஎஸ்டியினால் கடுமையாக பாதிக்கப்படுகிறோம்.

மத்திய, மாநில அரசுகள் எங்கள் கோரிக்கை ஏற்காவிட்டால் வரும் ஜூலை 5ஆம் தேதியிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என அவர் தெரிவித்தார். ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல்கொடுத்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Erode cloth merchants association requested central government to give exemption from GST. Otherwise they will protest from july 5th.
Please Wait while comments are loading...