For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தண்டனை முடியும் முன்னரே சஞ்சய் தத் எந்த அடிப்படையில் விடுதலை? பேரறிவாளன் மீண்டும் கேள்வி

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

வேலூர்: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிவதற்கு முன்னரே நடிகர் சஞ்சய் தத் எதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார் என்று பேரறிவாளர் ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.

 How actor Sanjay Dutt was released from jail? Perarivalan file plea in RTI

இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் ஜெயலலிதா தலைமையில் கடந்த 2014-ஆம் ஆண்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. எனினும் அவர்களது விடுதலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 1993-ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் தண்டனை காலம் முடிவடைவதற்கு முன்னே அவர் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டார் என்று மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள தகவல் அறியும் உரிமை ஆணையத்துக்கு 2-ஆவது முறையாக பேரறிவாளன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் புனேவில் உள்ள எரவாடா சிறைக்கு பேரறிவாளன் இதே கேள்வியை ஆர்டிஐ மூலம் எழுப்பினார். அப்போது அவருக்கு பதிலளிக்க மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
AG Perarivalan, a convict in Rajiv Gandhi assassination case filed second RTI plea in Pune seeking to know grounds for Sanjay Dutt's release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X