விசாரணைக்குழு அறிக்கையே இன்னும் வரல.. அதுக்குள்ள இவருக்கு எப்படி தெரிந்தது?!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்துக்கு காரணம் சொன்ன பொன் ராதாகிருஷ்ணன்- வீடியோ

  மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்திற்கு சதித்திட்டமே காரணம் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அண்மையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோவிலின் கோபுர வாசலில் அமைக்கப்பட்டிருந்த 50 கடைகள் தீக்கிரையாகின.

  மேலும் கோவிலின் வீரவசுந்தராயர் மண்டபமும் பெரும் சேதமடைந்தது. உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  காலியான கடைகள்

  காலியான கடைகள்

  இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை உடனடியாக அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனால் கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டது.

  தொடர்ந்து விசாரணை

  தொடர்ந்து விசாரணை

  இதைத்தொடர்ந்து விபத்து தொடர்பாக விசாரிக்க மாவட்ட நிர்வாகம் 5 பேர் கொண்ட விசரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. அந்த குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மத்திய அமைச்சர் கண்டுபிடிப்பு

  மத்திய அமைச்சர் கண்டுபிடிப்பு

  தீ விபத்திற்கான காரணம் குறித்து அந்தக்குழு இன்னும் அதற்கான விசாரணை அறிக்கையை இன்னும் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தீ விபத்திற்கு காரணம் சதித்திட்டம் தான் என தெரிவித்துள்ளார்.

  சதிக்காரர்கள் யார்?

  சதிக்காரர்கள் யார்?

  இவருக்கு மட்டும் எப்படி இது சதித்திட்டம் என தெரிந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. சதித்திட்டம் என்று தெரிந்தவருக்கு சதிக்காரர்கள் யார் என்றும் தெரியும், ஆகையால் அதையும் கூறிவிட்டால் விசாரணை குழுவின் வேலை மிச்சமாகும் என்கின்றனர் மக்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Minister of state Pon Radhakirshnan has said that Madurai Meenakshi Amman temple fire accident reason is conspiracy. Minister's this statement became controversy now. How do minister knows fire accident is conspiracy?

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற