வாழ மறுக்கும் காதல் கணவன்... தற்கொலை முயற்சியில் மனைவி: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: காதல் திருமணம் செய்த கணவன், சேர்ந்து வாழ மறுப்பதால் விரக்தி அடைந்த மனைவி தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் பிரிட்டோவும் அதே பகுதியைச் சேர்ந்த விக்டோரியாவும் பள்ளிப் பருவத்தில் இருந்து காதலித்து வந்துள்ளனர். இருவரும் மூன்று மாதங்களுக்கு முன் போலீசார் துணையுடன் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

 Husband refused to live together and wife tried to commit suicide

காதல் திருமணம் செய்துகொண்ட சிறிது காலம் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர். திடீரென ஒருநாள் பிரிட்டோ அவரது பெற்றோரின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மனைவி விக்டோரியா பலமுறை அழைத்தும் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார்.

இதனால் விரக்தியுற்ற விக்டோரியா தற்கொலை செய்துகொள்ள முயற்சித்து காப்பாற்றப்பட்டுள்ளார். மேலும், இதுகுறித்து காரைக்குடி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டும் பிரிட்டோ பெற்றோரின் அச்சுறுத்தலுக்குப் பயந்து விக்டோரியாவுடன் சேர்ந்து வாழ மறுத்து வருகிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Ramnad Victoria and Britto got love marriage and now Britto refused to live with Victoria. Because of Husband's adamant nature, she tried to commit suicide.
Please Wait while comments are loading...