ஐடி அலுவலகத்தில் தினகரனின் சகலை டாக்டர் சிவக்குமார்.. விசாரணைக்காக ஆஜர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வருமானவரி அலுவலகத்தில் திருச்சி டாக்டர் சிவக்குமார் ஆஜராகியுள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சசிகலாவின் உறவினரான டாக்டர் சிவக்குமார் வீட்டில் கடந்த 9ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவரது வீட்டில் கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் டாக்டர் சிவகுமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் பினாமிகள் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான வருமான வரித்துறை அலுவலர்கள் ஒரே நேரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாரிகள் சோதனை

அதிகாரிகள் சோதனை

சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து நடத்தப்படுவதாகக் கூறப்படும் இந்த சோதனையின் ஒரு பகுதியாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமார் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

டிடிவி தினகரனின் சகலை

டிடிவி தினகரனின் சகலை

டிடிவி தினகரனின் சகலைதான் டாக்டர் சிவகுமார். தினகரனின் மனைவி அனுராதாவின் சகோதரி பிரபாவைத்தான் இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஜெயாடிவியின் நிர்வாக இயக்குநர் பதவியில் பிரபா இருக்கிறார்.

அப்பல்லோ டாக்டர் சிவகுமார்

அப்பல்லோ டாக்டர் சிவகுமார்

அப்பல்லோவில் ஜெயலலிதா சேர்க்கப்பட்ட தொடக்கத்தில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் சசிகலா குடும்பத்தை சேர்ந்த டாக்டர் சிவகுமாரும் ஒருவர். இவர் ஜெயலலிதாவின் சிகிச்சைகளை மேற்பார்வை செய்தது அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

ரெய்டில் சிக்சிய சிவகுமார்

ரெய்டில் சிக்சிய சிவகுமார்

தவறான சிகிச்சை காரணமாகத்தான் ஜெயலலிதா மரணமடைந்தார் என ஜெயலலிதாவுக்கு முன்பு சிகிச்சையளித்த பிரபல டாக்டர் ஷங்கர் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் வருமான வரித்துறை சோதனையில் டாக்டர் சிவகுமார் வீடும் தப்பவில்லை.

வீட்டு கதவு உடைப்பு

வீட்டு கதவு உடைப்பு

திருச்சி ராஜா காலனி, 3வது குறுக்குத் தெருவில் வசிக்கும், டாக்டர் சிவக்குமார் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் சோதனையிட சென்றனர். ஆனால் டாக்டர் சிவகுமார் சென்னையில் இருந்ததால் வீடு பூட்டியிருந்தது. அதனால் மேல் தளத்தில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது.

சகலை வீட்டில் ரெய்டு

சகலை வீட்டில் ரெய்டு

1998ஆம் ஆண்டு ஜெயா டிவியை தொடங்கியது மாவிஸ் சாட்காம். இதன் போர்டில் சிவகுமாரும் கார்த்திகேயனும் இடம்பெறவில்லை. ஆனால் சிவகுமாரின் மனைவி பிரபா சிவகுமார்தான் நிர்வாக இயக்குநர். பிரபாவின் சகோதரி அனுராதாவும் ஜெயா டிவியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர். அனுராதா, சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மூத்த மகனான டிடிவி தினகரனை திருமணம் செய்துள்ளார். அனுராதாவின் தங்கை பிரபா அப்பல்லோ டாக்டர் சிவகுமாரை திருமணம் செய்துள்ளார்.

விசாரணைக்கு ஆஜர்

விசாரணைக்கு ஆஜர்

ஜெயாடிவி அலுவலகத்தில் கடந்த 5 நாட்களாக சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஜெயாடிவி நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. அதனடிப்படையில் பிரபா சிவகுமார் வீட்டில் சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டாலும் விசாரணைக்கு சிவகுமாரை மட்டும் அழைத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அப்பல்லோ சிகிச்சை தொடர்பான வீடியோ எதுவும் சிக்கியுள்ளதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dhinakaran's relative Dr Sivakumar today appear in IT office in Nungambakkam. Sivakumar was the personal physician of Jayalalithaa.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற