நான் உங்களை கண்காணிக்கிறேன்... - கதை சொல்லும் கமலின் கண்கள்- பிக் பாஸ் டிரெயிலர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்ஹாசனின் கண்கள் ஆயிரம் கதை சொல்லும். நாயகிகள், ரசிகைகளுக்கு கமலின் கண்கள் அதிகம் பிடிக்கும். அந்த கண்களை வைத்தே அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான டிரெயிலரை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

சர்வேதேச நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற நிகழ்ச்சிதான் பிக் பாஸ். தற்போது விஜய் தொலைக்காட்சி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. விரைவில் ஒளிபரப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் டிவி தொகுப்பாளராக அறிமுகமாகிறார் கமல்ஹாசன்.

பிரம்மாண்ட வீடு

பிரம்மாண்ட வீடு

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லோனேவாலாவில் பிரமாண்டமான வீடு தயாராகி வருகிறது. இந்த வீட்டில் தங்கப் போகும் சிறப்பு விருந்தினர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

15 பிரபலங்கள்

15 பிரபலங்கள்

இந்நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் நூறு நாட்கள் இணைந்து வசிக்கப் போகின்றனர். அதுவும் வெளியுலக தொடர்பில்லாமல் நூறு நாட்கள் தொடர்ந்து வசிக்கப் போகின்றனர் அதுதான் இந்த நிகழ்ச்சியின் சாராம்சம்.

கெடுபிடிகள் அதிகம்

கெடுபிடிகள் அதிகம்

பரிசோதனைக்குப்பிறகே அந்த வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அங்கு வீட்டில் புகைப்பிடிக்கவோ, மது அருந்தவோ அனுமதி இல்லை. விதிகளை மீறுபவர்கள் போட்டியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள்.

எதுவும் கிடையாது

எதுவும் கிடையாது

பிக்பாஸ் வீட்டிற்குள் தங்கும் விருந்தினர்களுக்கு மொபைல் போன், லாண்ட் லைன் போன்ற எந்த தொலைத்தொடர்பும் வழங்கப்பட மாட்டாது. அந்த வீட்டில் கடிகாரம், நாளிதழ்கள், பேப்பர் பேனா போன்ற எந்த உபகரணங்களும் இருக்காது. இப்படியாக அவர்கள் நூறு நாட்கள் அந்த வீட்டில் வசிக்கவேண்டும்.

பகலில் உறங்கக் கூடாது

பகலில் உறங்கக் கூடாது

இதில் கலந்து கொள்ளும் நபர்கள் கோபப்பட்டு வீட்டில் உள்ள எந்தப் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தக் கூடாது. பகல் நேரத்தில் உறங்க அனுமதி கிடையாது. அவர்களுக்கான வெளியேறும் நேரம் வரும் வரை வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது.

அசத்தல் டிரெயிலர்

விஜய் டிவியில் சீரியல்களுக்கு ட்ரெயிலர் வெளியிட்டு ரசிகர்களை ஈர்ப்பார்கள். இப்போது கமலின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ட்ரெயிலர் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளனர். கமலின் கண்களில் கேமரா. அது உங்களை கண்காணிக்கிறது என்று சொல்லாமல் சொல்லியுள்ளனர்.

நான்தான் சரியான ஆள்

நான்தான் சரியான ஆள்

விஜய் டிவி பிக் பாஸ் தொகுப்பாளராக அறிமுகமாக உள்ள கமல், இது பற்றி சுவாரஸ்யமாக பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சி என்னை முதலில் அணுகியபோது நான் சிரித்தேன். என்னைத் தவிர வேறு யார் சரியாக இருக்க முடியும் என்று.

கண்காணிப்பு

கண்காணிப்பு

என் வாழ்க்கையில் பொது விஷயங்களோ அல்லது தனிப்பட்ட விஷயமோ, எனது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டுதான் வந்துள்ளது. தற்போது எதிர்மறையாக இருக்கப் போகிறது.

நான் கண்காணிக்கிறேன்

நான் கண்காணிக்கிறேன்

மக்களுடன் சேர்ந்து இந்த வீட்டில் வசிப்பவர்களை நான் கண்காணிக்கவேண்டும். இந்த பிக் பாஸ் வீட்டில் பிரபலங்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கப் போகிறேன். இந்த வீட்டில் நூறு நாட்கள் வரை வசித்து வெற்றியை தக்கவைக்க போகிறார்களா என்பதை பார்க்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

வித்தியாசமாக தர முயற்சிப்பேன் அமிதாப் பிக் பாஸ்

வித்தியாசமாக தர முயற்சிப்பேன் அமிதாப் பிக் பாஸ்

நான் முந்தைய சீசன்களை பார்த்திருக்கிறேன். அமிதாப், சல்மான்கான் ஆகியோர் மிக சிறப்பாகவே நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். நானும் இந்த நிகழ்ச்சியை வித்தியாசமாக கொடுக்க முயற்சி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

எகிறும் எதிர்பார்ப்பு

எகிறும் எதிர்பார்ப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு அன்று இரவு 8.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்பதால் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது. தனது டிஆர்பியை அதிகரிக்க கமலை களம் இறக்கியுள்ளது விஜய் டிவி. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் எகிறிக்கிடக்கிறது. விருந்தினர்கள் யார் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. விஆர் வெயிட்டிங்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamal Haasan said I would stand with the audiences and watch these celebrities in the house survive this ordeal.
Please Wait while comments are loading...