For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையில் அனலுக்கு மத்தியில் தென்றல்... கலகலப்பை ஏற்படுத்திய இடிந்தகரை மீன்கள்

இடிந்தகரை மீன்கள் ருசியாக இருக்கும் என்று ராதாபுரம் எம்எல்ஏ கூறியதால், அந்த மீன்களை சபாநாயகர் கேட்டதால் சட்டப்பேரவையில் கலகலப்பு ஏற்பட்டது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை 3வது நாளாக இன்று காலை கூடியதும் உள்ளாட்சித்துறை மற்றும் மீன்வளத்துறை குறித்த மானியக்கோரிக்கை நடைபெற்றது.

அப்போது, ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை பேசுகையில், நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் மீன் பதப்படுத்தும் பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் அவர் பேசுகையில், இடிந்தகரை மீன்கள் சுவையாக இருக்கும் என்றார்.

Idinthakrai fishes make wave in TN Assembly

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், இடிந்தகரை மீன்களை எம்எல்ஏக்களுக்கு அளிக்கலாமே என்றதும் இறுக்கமாக காணப்பட்ட சட்டசபை கலகலப்பானது.

அப்போது எழுந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீன்வனத்துறை மானிய கோரிக்கையின்போது மீன்கள் வழங்கப்படும் என பதில் அளித்தார். மேலும், இடிந்தகரையில் மீன் பதப்படுத்தும் பூங்கா அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

English summary
Tamil Nadu assembly session saw a hilarious debate on Idinthakarai fishes today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X