கல்யாண கோஷ்டி போல்.. டாக்சி பிடித்து ரெய்டுக்கு வந்த இன்கம் டாக்ஸ் அதிகாாரிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி ரெய்டு-வீடியோ

  சென்னை: திருமண ஸ்டிக்கருடன் வாடகை காரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்தது தெரியவந்துள்ளது.

  சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை என 190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

  வரி ஏய்ப்பு மற்றும் கறுப்புப்பணம் ஒழிப்புக்காக சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைதான் இந்த சோதனை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

  வாடகை காரில் வந்தனர்

  வாடகை காரில் வந்தனர்

  இந்நிலையில் வருமான வரித்துறை சோதனை விஷயம் மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வருமான வரித்துறை ரெய்டு விஷயம் முன்கூட்டியே கசிந்துவிடக் கூடாது என்பதற்காக அதிகாரிகள் வாடகை காரில் சென்றுள்ளனர்.

  கல்யாண ஸ்டிக்கர்

  கல்யாண ஸ்டிக்கர்

  மேலும் திருமணத்திற்கு செல்வது போல் Srini weds Mahi என்ற கல்யாண ஸ்டிக்கர்களை காரில் ஒட்டியுள்ளனர். ரெய்டு நடக்கும் 190 இடங்களுக்கும் அதிகாரிகள் இதுபோலவே கல்யாணத்திற்கு செல்வது போல் சென்றுள்ளனர்.

  வாடகை கார்கள் முன்பதிவு

  வாடகை கார்கள் முன்பதிவு

  அதிகாரிகள் செல்வது குறித்து யாருக்கும் தகவல் தெரியக்கூடாது என்பதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த யுத்தியை கையாண்டுள்ளனர். அதிகாலையிலேயே ரெய்டு நடத்த முன்கூட்டியே வாடகை கார்களையும் வருமான வரித்துறையினர் முன்பதிவு செய்துள்ளனர்.

  ஆதரவாளர்கள் வீட்டில் ரெய்டு

  ஆதரவாளர்கள் வீட்டில் ரெய்டு

  190 இடங்களிலும் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவில் உள்ள சசிகலாவின் ஆதரவாளர்கள் வீட்டிலும் ரெய்டு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  IT officials has come in a call taxi for raid. They have come like for marrige function.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற