ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை.. எப்போது, யார் விசாரிக்கப்படுகிறார்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் இனி யார், எப்போது விசாரிக்கப்பட இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார்.

அவருடைய மரணத்தில் சந்தேகங்கள் இருந்ததால் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

Jayalalithaa death inquiry commission's upcoming inquiries

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணன் உள்பட 8 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 70க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன என்று விசாரணை கமிஷன் தெரிவித்துள்ளது.

இந்த பத்திரங்கள் மீதி கடந்த சில வாரங்களாக ஆறுமுகசாமி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் எப்போது யார் யார் விசாரிக்கப்பட இருக்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி மருத்துவர் சிவகுமார் வரும் 8ம் தேதியும், பூங்குன்றன் - 9ம் தேதியும், பெருமாள்சாமி - 10 தேதியும் விசாரிக்கப்பட இருக்கிறார்கள். அதேபோல் டாக்டர் பாலாஜி - 11 ம் தேதியும், டாக்டர் சாமிநாதன் - 12ம் தேதியும் விசாரிக்கப்படவுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The commission headed by retired judge A Arumughaswamy, set up to inquire into the death of late Chief Minister J Jayalalithaa. The upcoming inquiries list has been released by commission.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற