For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நா. முத்துக்குமாரை முன்வைத்து ஃபேஸ்புக்கில் மாலன் நடத்திய 'விவாதம்'

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திரைப்பட பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் திடீர் மறைவு தமிழகத்தை பேரிடியாகத் தாக்கியது. 41 வயதில் அழிக்க முடியாத படைப்புகளை சாதனைகளை செய்துவிட்டு துயில் கொள்ளப் போய்விட்ட நா. முத்துக்குமாரின் நினைவுகளோடு திரை உலகம் துடித்து கதறியது.

இந்த நிலையில் பத்திரிகையாளர் மாலன் (மாலன் நாராயணன்) தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படி ஒரு பதிவை போட்டிருந்தார்....

மாலனின் பதிவும் விவாதங்களும்:

இதை விவாதிப்பதற்கு இது உகந்த தருணம்தானா என்ற தயக்கமும் கேள்வியும் இருக்கத்தான் செய்கிறது. அதனால் இந்தக் கேள்வியை முடக்கி வைத்திருந்தேன்.

இன்றைக்கு தினமணி நவீன காதலைப் பிரதிபலித்தவ்ர் என்று எழுதியிருப்பதைப் படித்ததும் கேள்வி விழித்துக் கொண்டுவிட்டது.

Journalist Malan's debate on Na. Muthukumar

முத்துக்குமாரின் பாடல்கள் பெரும்பாலும் ஆணின் மனதை/உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றனவே எனக் கேட்கிறாள் சகி.

தேவதையைக் கண்டேன், உனக்கெனவே, கண்பேசும் வார்த்தைகள், அவள் அப்படியொன்றும், பூக்கள் பூக்கும் தருணம், ஆனந்தயாழை, வெயிலோடி விளையாடி என் நீண்டதொரு பட்டியலை நீட்டுகிறாள்.

பெண் குரலை அதிகம் கேட்க முடியவில்லை என்பது அவரது ஆதங்கம்.

பேஸ்புக் தோழிக்ளைக் கேட்டு பதில் சொல்கிறேன் எனச் சொல்லியிருக்கிறேன்.

சகி சொல்வது சரியா தோழிகளே? (தோழர்களும் உதவலாம்)

Leena Manimekalai: He never had an oppurtunity to work with women filmmakers or "gender sensitive" men filmmakers.
Love in popular tamil cinema has always been male centric and even the "middle road" "alternative" filmmakers are no exceptions.
A lyricist can never be independent in his expression in cinema. He is story/director bound.
His engagement with serious literature was limited because of his magnitude of work in popular cinema. But within the framework, i feel, he was sincere to poetry and dint yield himself to write derogatory ones insulting women.

Srinivasa Raghavan S
அவருக்குத் தரப்பட்ட சூழலுக்கு ஏற்றபடி எழுதிய திரைப்படப் பாடல்களை மட்டும் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. அவரது தனிப்பாடல் திரட்டுக்களே அவரது மனப்பாங்கை உரக்கச் சொல்ல வல்லவை.

மாலன் நாராயணன்:

லீனா, வெகுகாலத்திற்கு முன், கண்ணதாசன் பாட்டெழுதிக் கொண்டிருந்த காலத்தில் பெண்களின் உணர்வுக்ள் -காதல் மட்டுமல்ல்- பாடல்கள் இரண்டு ஒலித்துக் கொண்டிருந்தது 'உந்தன் நினைவைக் கொண்டு செல்லவா? எந்தன் ம்னதை தந்து செல்லவா?' (காதல்) சிறகில் எனை மூடி அருமை மகள் போல் வளர்த்த கதை சொல்லவா(பாசம்) ,' உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா' (காமம்).

Journalist Malan's debate on Na. Muthukumar

வைரமுத்துவில் கூட இது இருந்தது (கண்ணாளனே) இவையெல்ல்லாம் ஆண்கள் பார்வையில் சொல்லப்பட்ட பெண் உணர்வுகள் என்ற போதும், அதற்காகவாவது இடம் இருந்தது. இப்போதும் நீங்கள் சொல்லும் male centric சினிமாவில் தாமரை பெண்குரலை ஒலிக்க முயற்சிக்கிறாரே (வசீகரா) தற்காலக் கவிஞர்கள் பால் மாறி கூடு விட்டுக் கூடு பாயும் திறனை அல்லது மனதை இழந்து விட்டார்களோ?

Leena Manimekalai
Kannadasan and Vairamuthu even when given a chance to write for female voice were very patronising (to my sensibilities)
Thamarai did justice to all the female voices she wrote and she is been a sole voice. I do remember Muthukumar's one song in Vasanth's film "Pesugiren Pesugiren" (again a female voice)

ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர்

மாலன் நாராயணன் 2011 ல் வெளிவந்து விருதுகளைப் பெற்ற என் நர்த்தகி திரைப்படத்தில் "பூவின் மனம் பூவில் இல்லை"என்று பெண்ணின் காதல் உணர்வை வெளிப்படுத்தும் பாடலை எழுதியுள்ளார்.

பாடல் காட்சியும் காதலனை உறவுக்கு ஏக்கத்துடன் காதலி அழைப்பதாகவே இருக்கும். பாடல் காட்சியும் உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்.

உலக சினிமாக்களை மட்டுமே சினிமாவாக பார்ப்பவர்களுக்கு அல்லது தன்னை மட்டுமே பெண் இயக்குநராக நினைத்துக் கொண்டு உலா வருபவர்களுக்கு "நர்த்தகி"ஒரு திரைப்படமாகவே தெரியாது(.அப்படியா அப்படி ஒரு படம் வந்ததா என்றும் கேட்க கூடும்)

என்னையும் பெண் இயக்குநர் என்று ஒத்து கொள்ளும் மனநிலையும் இருக்காது. இன்னொரு விசயம் படைப்பு என்பதில் ஆண் என்ன ..பெண் என்ன?

இதில் பெண் இயக்குநர் "என்ற பதமே தவறு. பெண் உணர்வுகளை எழுதினாரா என்பது மட்டுமே கேள்வி. எழுதியிருக்கிறார் என்பது மட்டும் தான் பதிலாக இருக்க முடியும்.

ஆனால் சதவிகித அளவில் குறைவாக எழுதியுள்ளார் என்றே சொல்ல முடியும். அதற்கு காரணம் பெரும்பாலும் அவர் பாடல்கள் கமர்ஷியல் படங்களுக்கே எழுதியிருக்கிறார்.

அதில் பெண் உணர்வுகளுக்கே சிறிய இடம்தான். இதில் பாடல் இடம் பெற வழியில்லை. இது குறித்து மேலும் விவாதங்களைத் தவிர்க்கிறேன். கேள்வி உங்களுடையதாக இருந்ததாலும், முத்துகுமார் பெண் இயக்குநர்களுடன் வேலைப் பார்த்ததில்லை என்று எல்லாம் தெரிந்தாற் போல் ஒரு பதிலை "உங்கள்" பதிவில் பார்த்ததால் உங்களையும்,நண்பன் முத்துகுமாரையும் மதித்து பதில் அளித்தேன்

Priya Darshini

பெண்களுக்கு பிடித்த மாதிரியான ஆண்களின் மனத்தைப் பிரதிபலித்திவிட்டு சென்றிருக்கிறார், முத்துகுமார். ஒரு வேளை, பெண்களுக்குள் கூடு பாய்ந்து அவர்களுடைய குரலைச் சொல்லும் ஸ்டைல் தன்னுடையதல்ல என நினைத்திருக்கலாம்..

இல்லையெனில் அவ்வாறு ஒரு சூழல் அமையாது போய் இருக்கலாம். அவரது புத்தகங்கள் கூட ஆண்களுடைய மனதையே வெளிப்படுத்துவதைப் பார்க்கையில், முன்னது தான் உண்மையாக இருக்கும்.

Bharathi Priyadharshini
முத்துக்குமார் ஒரு ஆண் . அவர் வரிகள் பெண்களுக்கானதாக இருந்தாலும் அதில் ஆணின் மனது தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம்.

எல்லா ஆண் இலக்கியவாதிகளும் பெண்களுக்காக எழுதும் போது ஒரு ஆணின் உணர்வுகளையும் எதிர்ப்பார்ப்புகளையும் சேர்த்தே பிரதிபலிப்பார்கள்.

English summary
Journalist Malan created a debate on Poet Na. Muthukumar in his FB.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X