அரசு இசை பள்ளிகளில் ஒளி, ஒலி நூலகங்கள் அமைக்கப்படும்.. வெல்லமண்டி நடராஜன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை மாவட்ட அரசு இசை பள்ளிகளில் ஒளி, ஒலி நூலகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா குறித்த பாடங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.

தமிழக சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றை கூட்டத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

light and sound libraries will be set up at district government music schools : Vellamandi Natarajan

அதன்படி வேலூர் கோட்டையில் அருங்காட்சியகம் விரிவுபடுத்தப்படும் என அவர் கூறினார். சென்னை அருங்காட்சியகம் மற்றும் பிற அருங்காட்சியகத்திற்கு கணினி இணைப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.

பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா குறித்த பாடங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிவித்தார். மேலும் கல்வெட்டுகளை பாதுகாக்க நவீன தொழில்நுட்பத்துடன் புதிய கட்டடங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மாவட்ட அரசு இசை பள்ளிகளில் ஒளி, ஒலி நூலகங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் சுற்றுச்சுவர் எழுப்பப்படும் என்றும் அவர் கூறினார். சுற்றுலா அலுவலகங்களுக்கு லேப்டாப், பிரிண்டர் வாங்க ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Vellamandi Natarajan said that light and sound libraries will be set up at district government music schools. The lessons of tourism will introduce to the school students.
Please Wait while comments are loading...