தேனியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நாளை பள்ளிகளுக்கு விடுமுறை- சர்ச்சை

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தேனியில் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பருவமழை என்று கூறி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் நடைபெற்று வருகிறது. நாளை வியாழக்கிழமை தேனி -போடி விலக்கு பகுதியில் உள்ள திடலில் நடைபெற இருக்கிறது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறுவதையொட்டி தேனியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு தடை

மாணவர்களுக்கு தடை

பள்ளி மாணவர்களை அரசியல் சார்ந்த விழாக்களுக்கு அழைத்து செல்ல கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைக்கவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை உத்தரவு

சர்ச்சை உத்தரவு

மாணவர்களை பள்ளி சீரூடையில் இல்லாமல், வழக்கமான ஆடையில் அழைத்து வர அதிமுக நிர்வாகிகள் திட்டம் தீட்டியுள்ளதாக தெரிகிறது. கரூர் மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடந்த போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளி மாணவர்களை அரசியல் சார்ந்த விழாக்களுக்கு அழைத்து செல்ல கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் மாணவர்கள் அழைத்து செல்லப்படுவது உறுதியானால் அது நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகும். எனவே பருவமழையை காரணம் கூறி தேனி மாவட்டத்தில் விடுமுறை விடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் அவதி

பொதுமக்கள் அவதி

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத் திடலில் மாவட்ட அரசுத் துறைகள் சார்பில் அரசு சாதனை விளக்கக் கண்காட்சி, எம்.ஜி.ஆர்.புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது. எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 7 மணி வரை தேனியில் இருந்து கம்பம், போடி, பெரியகுளம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வரும் பேருந்துகள் மற்றும் கனரக வானங்களின் போக்குவரத்து வழித்தடம் மாற்றப்பட்டுள்ளளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MGR birth centenary celebration November 9th in Theni. District collector announced holidays in Theni.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X