சாத்தூரில் மின்னல் தாக்கி பட்டாசு ஆலை தரைமட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகாசி: சாத்தூர் அருகே மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலை தரைமட்டமானது.

சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடியுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாத்தூரை அடுத்த பல்வார்பட்டியில் செயல்படும் தனியார் பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியது.

Near sathur a crackers factor was crushed by the lightning

இதில் பலத்த சத்தத்துடன் பட்டாசு ஆலையின் ஒரு அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதைத்தொடர்ந்து அந்த அறையும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதேபோல் சிவகங்கை மாவட்ட காரைக்குடி பாகனேரி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Near sathur a crackers factor was crushed by the lightning. Heavy rain occurs in Virudhunagar, sivagangai districts.
Please Wait while comments are loading...