அப்பாவும், மகளும் நேரில் பேசிக்க மாட்டாங்களா..? கமலை வாரும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்ஷரா ஹாசன் மதம் மாறிய விவகாரத்தை டிவிட்டரில் கமல்ஹாசன் வெளியிட்டாலும் வெளியிட்டார், அதற்கு தெளிவுரை எழுதுவது, அதற்கு பதிலடி கொடுப்பது என நெட்டிசன்கள் ஏக பிசியாக உள்ளனர்.

கமல்ஹாசன் நாத்தீகர். அவரது மகள் அக்ஷரா ஹாசன் புத்தமதத்தை தழுவியுள்ளார். இதுகுறித்து இன்று கமல் ஆங்கிலத்தில் டிவிட் வெளியிட்டிருந்தார்.

கமல் தனது டிவிட்டில் அக்ஷராவை குறிப்பிட்டே தனது வாழ்த்தை தெரிவித்திருந்தார். கமல் ஏன் டிவிட்டரில் அதை தெரிவித்தார் என்பது முதல், அந்த டிவிட்டுக்கான தெளிவுரை வரை நெட்டிசன்கள் பார்வை இதோ:

கமல் டிவிட் இதுதான்

ஏன் அப்பாவும், மகளும் நேரா பேசிக்க மாட்டீங்களோ.. என்று கேட்கிறது இந்த டிவிட். நியாயம்தானே, இதை மகளிடம் கமல் தெரிவித்திருக்கலாம் அல்லவா.

விளம்பர பிரியர்

"அப்புறம் இவரோட பெருந்தன்மைய எப்பிடி ஒலகம் தெரிஞ்சிக்கும்?" என்று இதற்கான காரணத்தை கூறுகிறது இந்த டிவிட். கமல் அந்த அளவுக்கு விளம்பர பிரியர் என்பதாக நினைக்கிறார் இந்த நெட்டிசன்.

இப்படியும் சமாளிக்கலாம்

ஆண்டவர் வாட்ஸாப்ப்னு நெனச்சு ட்வீட் போட்டுட்டாருனு சமாளிப்பாங்க.. நீங்களும் என் குடும்பம் தானே..தெரிந்தால் தப்பில்லேன்னு கொழப்பிடுவார்😂😜

பிக்பாஸ் மொக்கையாகிவிட்டதே

பிக்பாஸூம் மொக்க போடுது இவர் ட்வீட்டும் மொக்க போடுது. .அடப்போங்கப்பா .. 😂😕🚶🚶

பாசிட்டிவ்

மனிதனை மனிதனாய் பாரு மதங்களும் கண் காண ஓடும்👌

நாளை அன்பெனும் தீபத்தை ஏற்றி நீ வைத்தால் நாளையும் எரியும் பேர் சொல்லும் ஜோதி ஜோதி🙏

இந்த வந்துட்டாங்க பொழிப்புரை எழுத

ஹாய் அக்சு நீ உன்னோட மதத்தை மாத்திக்கிட்டயா?

என் அன்பு உண்டு நீ மதம் மாறினாலும். அன்பு மதம்போல் இல்லை அது நிபந்தனையற்றது கொண்டாடு வாழ்வை

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens troll KamalHassan as he writes to his daughter Akshara who convert religion in Twitter.
Please Wait while comments are loading...