அதிமுகவை உடைத்தது போதாதா.. பாஜகவால் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரசும் இரண்டானது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுவை: தமிழகத்தில்தான் அதிமுக மூன்றாக பிரிந்து கிடக்கிறது என்றால், புதுச்சேரியில் எதிர்க்கட்சியாக உள்ள என்.ஆர்.காங்கிரசும், பாஜகவுக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில், இரண்டாக உடைந்துபோகும் சூழல் உருவாகிவிட்டது.

பாஜக குடியரசு தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் களமிறங்கியுள்ளார். அவரை ஆதரிக்க ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.கட்சி எடுத்த முடிவிற்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

NR Congress split in the issue of support for the presidential poll

புதுச்சேரி வந்த பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவை சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஆதரவை ரங்கசாமி தெரிவித்த நிலையில், 3 எம்எல்ஏக்கள் அந்த சந்திப்பை புறக்கணித்துள்ளனர்.

ரங்கசாமியுடன் என்.ஆர்.காங்கிரசின் 5 எம்.எல்.ஏ.க்கள் உடன் சென்று அமித்ஷாவை சந்தித்தனர். ஆனால், அக்கட்சியின் பிரியங்கா, செல்வம், திருமுருகன் ஆகிய மூன்று எம்எல்ஏக்கள் சந்திப்பை புறக்கணித்துள்ளனர்.

இதனால் 8 எம்எெல்ஏக்களை கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் இரண்டாக உடைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In the Puducherry opposition party, NR Congress split in the issue of support for the presidential poll.
Please Wait while comments are loading...