அமைதிப் பூங்காவான தமிழகத்தில் குழப்பம் விளைவிப்பதா? எச். ராஜவுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் கடும் எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  எச். ராஜா பல்டி வாக்குமூலத்தின் உண்மைத் தன்மை அறியப்படும்... ஓ.பன்னீர்செல்வம் உறுதி!- வீடியோ

  சென்னை: பெரியார் சிலையை அகற்றுவேன் என்று எச்.ராஜா கூறியதற்கு தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  பாஜக கட்சி வெற்றிபெற்ற பின் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட்டு இருக்கிறது. இது இந்தியா முழுக்க சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

  OPS and EPS condemn H Raja comment on Periyar statue issue

  இந்த சர்ச்சை அடங்கும் முன் லெனின் சிலை போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார். அவர் பதிவிட்ட கருத்து கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.

  பல அரசியல் தலைவர்கள் இவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். எச்.ராஜா கருத்திற்கு தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  அதில் ''அதிமுக ஆட்சி அராஜக செயல்களை அனுமதிக்காது. அமைதியாக இருப்போம் என்று யாரும் கனவில் கூட நினைக்க வேண்டாம்.பெரியாரை தமிழ்ச் சமுதாயம் கடவுள் மறுப்பாளராகப் பார்க்கவில்லை.'' என்றுள்ளனர்

  அதில் ''தந்தை பெரியார் இல்லையெனில் திராவிடத்தில் எழுச்சி இல்லை.தமிழகத்தில் ஜாதி, மத கலவரம், தீவிரவாதம் இல்லை.பல மாநிலங்கள் எரிந்த போதிலும், தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது.'' என்றுள்ளனர்

  அதில் ''அமைதியான பூங்காவில் எச்.ராஜா கல்லெறிந்துவிட்டார்.தமிழகத்தில் குழப்பம் விளைவித்து அதில் மீன் பிடிக்க முடியாது.'' என்றுள்ளனர்

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  OPS and EPS condemn H Raja comment on Periyar statue issue. H Raja said that, Periyar statue will be removed in Tamilnadu after BJP came into power.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற