மயில்கள் கண்ணீரை குடித்துதான் கர்ப்பம் தரிக்கிறதா? கண்டுபிடிக்க மக்கள் செய்யும் வேலையை பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மயில்கள் உடலுறவு கொள்ளாது என்று ராஜஸ்தான் நீதிபதி கூறிய நிலையில், அது உண்மைதானா என்பதை கண்டறிய பொதுமக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

மயில்கள் உடலுறவு கொள்ளாது என்றும் ஆண் மயிலின் கண்ணீரை குடிப்பதாலேயே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா சில வாரங்கள் முன்பு தெரிவித்து இருந்தார்.

நீதிபதியின் இருந்த கருத்துக்கு அறிவியலாளர்கள் மறுப்பு தெரித்திருந்தனர்.

மீம்கள்

மீம்கள்

இதேபோல நீதிபதியின் கருத்தை கேலி செய்து சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் கொடி கட்டி பறந்தன. இருந்தாலும் சிலருக்கு நீதிபதியே கூறியதால் அது உண்மையாக இருக்குமோ என்ற ஆர்வமும் ஏற்பட்டது.

மயில் பூங்காவில் கூட்டம்

மயில் பூங்காவில் கூட்டம்

எனவே நீதிபதி கருத்து கூறிய மறுநாள் முதல் மயில்கள் உடலுறவு கொள்ளுமா? கொள்ளாதா? என்பதைக் காண பாலக்காட்டில் உள்ள சூலனூர் மயில் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதேபோல பல்வேறு மிருககாட்சி சாலைகளிலும் மக்கள் கூட்டம் மயிலை சுற்றுகிறது.

வீடியோக்கள்

வீடியோக்கள்

அதேபோல மயில்கள் உடலுறவு கொள்ளும் என்பதை விளக்கும் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. ஆண் மயில் அழுவதால் பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறதா என்பதைப் பார்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுவதாக மிருககாட்சி சாலை ஊழியர்கள் கூறுகிறார்கள்.

கூட்டம் அதிகரிப்பு

கூட்டம் அதிகரிப்பு

சூலனூர் மயில் பூங்காவில் முன்பெல்லாம் தினமும் 20க்கும் குறைவானவர்களே வந்து சென்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை தற்போது 200-300 வரை அதிகரித்துள்ளது.

பணியாளர்கள் விவரிப்பு

பணியாளர்கள் விவரிப்பு

இந்தப் பூங்காவில் மூன்று வகையான 300 மயில்கள் உள்ளன. இங்கு வரும் பார்வையாளர்களுக்கு எவ்வாறு மயில்கள் உடலுறவு கொள்ளும் என்பதை பூங்கா பணியாளர்கள் விவரித்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Visitors flock kerala peafowl sanctuary to see if rajasthan High court judge was right.
Please Wait while comments are loading...