உண்டு உறைவிட பள்ளியில் ரத்தம்! மயங்கிய மாணவிகள்! "பேய்" ஓட்டிய பூசாரி.. கல்வராயன்மலையில் "திக் திக்"
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை உண்டு உறைவிடப் பள்ளியில் மயங்கி விழுந்த மாணவிக்கு திருநீர் வீசி பேய் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள கொட்ட புத்தூர் அரசு மழைவாழ் உண்டு உறைவிடப் பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த மலைவாழ் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தனி விடுதி கட்டடம் இல்லாததால் வகுப்பறையிலேயே தங்கி வருவதாக கூறப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வரும் இந்த பள்ளியில் விடுதி காப்பாளர் , காவலாளி இல்லாமல் உள்ளது.

அடிப்படை வசதி
அது போல் அடிப்படை வசதிகளான தண்ணீர் மற்றும் கழிப்பறை கட்டடங்கள் இல்லை. ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை கட்டடம் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வராத நிலையில் உள்ளது. ஒரே நேரத்தில் 4 மாணவிகள் பயன்படுத்தக்கூடிய சிறிய கழிப்பறை கட்டடத்தில் தண்ணீர் வசதி இல்லை.

பள்ளி கட்டடம்
இதனால் அருகில் உள்ள பள்ளி கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரை வாளியில் எடுத்துக் கொண்டு 20 அடி உயரமுள்ள கழிப்பறை கட்டடத்திற்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பள்ளியில் தங்கியிருந்த மாணவி ஒருவர் மன உளைச்சல் காரணமாக தன் கையை பிளேடால் அறுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

மளமளவென கொட்டிய ரத்தம்
இதையடுத்து அவரது கையில் இருந்து ரத்தம் மளமளவென வெளியே வந்தது. இதனால் அந்த மாணவி மயங்கி விழுந்தார். ரத்தத்தை கண்ட அதிர்ச்சியில் இன்னொரு மாணவியும் மயங்கி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காலையில் எழுந்த மாணவிகள் கழிப்பறைக்கு செல்வதற்காக அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடித்துக்கொண்டு சென்ற போது கீழே சிதறிக் கிடந்த ரத்தக் கறைகளை பார்த்துள்ளனர்.

பதற்றம்
உடனே அந்த மாணவியும் பதற்றத்தில் கீழே விழுந்தார். இதனால் அந்த மாணவிக்கு ரத்தம் கொட்டி உள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து மாணவிகள் கீழே விழுந்ததற்கான உண்மையான காரணத்தை அறியாத மற்ற மாணவிகள் கத்தி கூச்சல் போட்டுள்ளனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

ரத்த கறை
அந்த இடத்தில் இருந்த ரத்தத்தையும் மாணவிகள் அச்சத்துடன் இருந்ததையும் பார்த்துவிட்டு பேய் பிடித்துவிட்டதாக தவறாக எண்ணி பேய் ஓட்ட பூசாரியை வரவழைத்தனர். இதையடுத்து அங்கு வந்த பூசாரி,"இந்த பசங்க விட்டு போய்டு.. இல்லே விபூதியால் அடிப்பேன்" என பூசாரி மிரட்டினார். ஆனால் "பேய்" (பேய் பிடித்திருந்தால்தானே) பூசாரியின் மிரட்டலுக்கு அசரவில்லை.

கோபமடைந்த பூசாரி
இதனால் கோபமடைந்த பூசாரி அந்த மாணவிகள் மீது விபூதியை வீசினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பள்ளி இயங்கும் நேரம் வந்துவிட்டதால் ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வரவர அவர்களுக்கு விஷயம் தெரிந்து மாவட்ட மருத்துவமனைக்கு தகவல் அளித்து ஆம்புலன்ஸ் வாகனம் வரழைக்கப்பட்டது. மயங்கி விழுந்த 4 மாணவிகளும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை
அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து விசாரணை நடத்தியதில் கையை பிளேடால் அறுத்துக் கொண்ட மாணவி, தங்கள் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பெரும் மன உளைச்சலாக இருக்கிறது என்றும் இரவு நேரத்தில் பாத்ரூம் செல்ல அச்சமாக இருப்பதாகவும் பெண் விடுதி காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்குமாறு சமூகஆர்வலர்களும் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications