தியேட்டர்களில் காச கறக்குறாங்க.. குமுறும் ரசிகர்கள்! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக ரசிகர்கள் குமுறியுள்ளனர். கூடுதல் கட்டணம் வசூலிப்பால் தியேட்டர்களில் படம் பார்க்க சிரமமாக உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஜிஎஸ்டி சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதனால் 100 ரூபாய்க்கு குறைவாக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு 18 சதவீதமும் 100 ரூபாய்க்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு 28 சதவீதமும் ஜிஎஸ்டி நிர்ணயிக்கப்பட்டது.

Public accusing that theaters charging more cost for tickets

தமிழக அரசு கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியும் விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரையரங்கு உரிமையாளர்கள் 4 நாட்கள் தியேட்டர்களை மூடி வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.

இதையடுத்து தமிழக அரசுடன் ஏற்பட்ட தற்காலிக உடன்பாட்டை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு நேற்று முதல் தியேட்டர்கள் செயல்பட ஆரம்பித்தன. இந்நிலையில் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Public accusing that theaters charging more cost for tickets. After four days strike Theaters working from yesterday.
Please Wait while comments are loading...