ஆண்டாள் மீது நேற்று வராத நம்பிக்கை இன்றாவது வந்ததே... சுப.வீரபாண்டியன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 28 மணி நேரத்துக்கு முன்பு வரை ஆண்டாள் மீது வராத நம்பிக்கை இப்போதாவது வந்திருக்கிறதே என்று சுப வீரபாண்டியன் தெரிவித்தார்.

ஆண்டாளை இழிவுப்படுத்தி வைரமுத்து பேசியதால் அவர் சன்னதிக்கே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜீயர் சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். பின்னர் பல்வேறு காரணங்கள் அதை கைவிட்டார். இந்நிலையில் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கிய அவர் பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் வைரமுத்து வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

Suba Vee says about Jeeyar's Hunger strike

பிப்ரவரி 3-ஆம் தேதி வரை வைரமுத்து மன்னிப்பு கேட்காததால் பக்தர்களுடன் கலந்து ஆலோசித்து நேற்று முதல் தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

இந்நிலையில் செண்பகராமன் ஜீயர், எஸ்.வி.சேகர் எச்.ராஜா, பக்தர்கள் உள்ளிட்டோர் உடல்நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையேற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக இன்று ஜீயர் அறிவித்தார்.

இதுகுறித்து சுப.வீரபாண்டியன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் , கவிஞர் #வைரமுத்து வை #ஆண்டாள் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில், #ஜீயர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளாராம். நல்லது, 28 மணி நேரத்துக்கு முன்பு வரை ஆண்டாள் மீது வராத நம்பிக்கை இப்போதாவது வந்திருக்கிறதே! என்று கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Suba Vee says that Jeeyar withdraws his hunger strike because Andal will punish Vairamuthu. Its good Jeeyar gets faith on Andal after 28 hours itself.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற