கேரளாதான் பிடிக்கும் என்றால் கமல் ஹாஸன் அங்கேயே போய்விடலாம்!- எஸ்வி சேகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கேரளாதான் பிடிக்கும் என்றால் கமல் ஹாஸன் அங்கேயே போய்விடலாம்!-

  சென்னை: தமிழகத்தை விட கேரளாதான் பிடிக்கும் என்றால் கமல் ஹாஸன் அங்கேயே போய்விடலாம் என்று நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் கூறியுள்ளார்.

  செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் எஸ்வி சேகர் கூறுகையில், "கமல் ஹாஸன் ஒரு மூன்றாம் தர அரசியல்வாதி மாதிரி நடந்து கொள்கிறார். கேரள முதல்வர் கேள்வி கேட்க, அதற்கு இவர் வார இதழ் ஒன்றில் பதில் கூற.. எல்லாமே நகைச்சுவையாக உள்ளது.

  இந்து தீவிரவாதம்

  இந்து தீவிரவாதம்

  இந்து தீவிரவாதம் என்பது கமல் ஹாஸனின் கற்பனை. வேறொன்றுமில்லை. ஹாஸன் என்று பெயர் வைத்திருப்பதாலோ என்னமோ அவருக்கு இந்துக்களுக்கு எதிரான மனப்பான்மை வந்துவிட்டது போலிருக்கிறது.

  கேரளாவுக்கே போங்க

  கேரளாவுக்கே போங்க

  கமல் ஹாஸன் கேரளாவுடன் தமிழகத்தை ஒப்பிட்டுப் பேசும் அளவுக்கு எல்லாம் தமிழகம் தாழ்ந்துபோய்விடவில்லை. அப்படி கமலுக்கு கேரளாதான் பிடிக்கும் என்றால் அவர் கேரளாவிலேயே போய் வாழட்டும். சிலருக்கு சில விஷயங்கள் சிறு வயதிலிருந்து பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக அவை தவறு என்று ஆகிவிடுமா என்ன?

  ஒழுக்கமான வாழ்க்கை

  ஒழுக்கமான வாழ்க்கை

  பொதுவாக இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை. ஒழுக்கமான வாழ்க்கை என்பது நம் நடை முறை. ஆனால் அந்த முறை தேவையில்லை, நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்பவர்களுக்கு இந்து மதம் பிடிக்காதுதான்.

  கரன்ட் பெட்டிக்குள்

  கரன்ட் பெட்டிக்குள்

  தொடர்ந்து இந்து மதம் குறித்து விமர்சிப்பதன் மூலம் கரண்ட் பெட்டிக்குள் கை வைக்கிறார் கமல் ஹாஸன். அதன் விளைவு விபரீதமாக இருக்கும். கமல் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும்," என்றார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor SV Shekar strongly condemned Kamal Haasan for his comments against Hindu religion.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X