தரை மேல் பிறக்க வைத்தான்... தண்ணீரில் பிழைக்க வைத்தான்... இதுதான் சென்னையின் நிலை #ChennaiRains2017

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மற்ற மாவட்டங்களில் மழை என்றாலே கொண்டாட்டமாக இருக்கும் நிலையில் சென்னையை பொருத்த வரை அது திண்டாட்டமாகவே மாறிவிட்டது என்கிறது அசத்தல் மீம்ஸ்.

கடந்த 4 நாள்களாக சென்னையில் விடாது கருப்பு போல் மழை கொட்டி வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் மழை ஓய்ந்தாலும், மீம்ஸ்களை உருவாக்கியே தீருவோம் என்று சபதம் எடுத்து கொண்டது போல் மீம்ஸ் பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் உருவாக்கியவற்றில் இருந்து சில...

மெரினாவுல குதிக்க போறேன்

நான் இப்ப சென்னையிலதான் இருக்கேன். அதுவும் கடல் எது நிலம் எதுனு தெரியாமல் இருக்குற மெரினா பீச்சுல குதிக்க போறேன்.

தரை மேல் பிறக்க வைத்தான்

மற்ற மாவட்டங்களில் மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது.

சென்னையில் தரை மேல் பிறக்க வைத்தான்... எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்.

மின் துண்டிப்பதுதான்

இவனுங்களுக்கு தெரிஞ்ச ஒரே முன்னெச்சரிக்கை ஸ்கூல் லீவ் விடுறது,பவர் கட் பண்றது....

இப்ப ஐடி பார்க்

ஆறு ஓடிய இடம் ஐடி பார்க்காக உள்ள நிலையில் , வெள்ளம் வராம வெல்லமா வரும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Twitter comments shows what will be the status of the people who affected in Chennai rains.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற