ஈரோட்டில் அய்யாக்கண்ணு பாணியில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: விவசாயத் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு போன்று ஈரோட்டில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அரை நிர்வாணத்தில் பட்டை நாமம் போட்டு பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை ஏற்க அரசு மறுத்து வருவதால் தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

Transport workers protest in Erode as the Agricultural Association Chairman Ayyakannu

இந்நிலையில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் அய்யாக்கண்ணு பாணியில் போக்குவரத்து ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வயிறு மற்றும் நெற்றியில் பட்டை நாமம் இட்ட அவர்கள் கையில் மண் சட்டிகளை ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், பழனி ஆகிய இடங்களில் போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Transport workers protest in Erode as the Agricultural Association Chairman Ayyakannu. They took part in the protest of begging for half a naked.
Please Wait while comments are loading...