கந்திரி விழாவுக்குச் சென்ற மாணவிகள் சுனையில் மூழ்கி பலி... சிங்கம்புணரியில் சோகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: கந்திரி விழாவுக்குச் சென்ற மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவர் சுனையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது பிரான்மலை. இங்கு நடக்கும் கந்திரி விழா வெகு பிரசித்தம்.

Two girls drown in pond at Pranmalai

கந்திரி விழாவில் கலந்து கொள்ள சென்ற சிங்கம்புணரி தேத்தாங்காடு சேர்ந்த நிஜாமைதீன் மகள் ரிமாஷாபானு வயது (16) முத்துவடுகு சாமி நகரை சேர்ந்த ராஜா மகள் ஆஷா வயது (16) இருவரும் சென்றுள்ளனர்.

அப்போது, பிரான்மலை மீது உள்ள சுனை நீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக பலியாயினர். இருவரும் சிங்கம்புணரி அரசு மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தனர்.

Two girls drown in pond at Pranmalai

இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் எஸ் வி மங்களம் போலீசார், தீயணைப்புத் துறையினர் பிரான் மலைக்கு விரைந்து வந்து மாணவிகளின் உடல்களை மீட்டனர் .

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
2 girls studying Plus One drowned in a pond atop Pranmalai in Tirupattur taluk.
Please Wait while comments are loading...