For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூங்குன்றனின் பெயரில் இருந்த சொத்துக்களை ஜெ.மறைவுக்கு பிறகு எழுதி வாங்கிய விவேக்! திடுக் தகவல்கள்

பூங்குன்றனின் பெயரில் இருந்த சொத்துக்களை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு விவேக் வாங்கிக்கொண்டதாக வருமான வரித்துறைக்கு கூறப்பட்ட தகவலால் சசிகலா குடும்பம் விழி பிதுங்கி நிற்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பூங்குன்றனின் பெயரில் இருந்த சொத்துக்களை ஜெ.மறைவுக்கு பிறகு எழுதி வாங்கிய விவேக்!- வீடியோ

    சென்னை: பூங்குன்றனின் பெயரில் இருந்த சொத்துக்களை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு விவேக் வாங்கிக்கொண்டதாக வருமான வரித்துறைக்கு கூறப்பட்ட தகவலால் சசிகலா குடும்பத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

    கடந்த வியாழக்கிழமை சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் நிறுவனங்களை வளைத்து வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தியது. ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் உள்ளிட்ட நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டிவி சிஇஓவுமான விவேக் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் பல கணக்கில் வராத ஆவணங்கள்ள சிக்கியதால் 5 நாள் சோதனை முடிந்த கையோடு விவேக்கை விசாரணைக்கு அழைத்து சென்றது வருமான வரித்துறை.

    ஜெ. உதவியாளர் பூங்குன்றன்

    ஜெ. உதவியாளர் பூங்குன்றன்

    யாரும் எதிர்பாராதவிதமாக ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனின் அடுக்குமாடி குடியிருப்பிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. பூங்குன்றன் வசித்த அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடி வரை சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி

    அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி

    நேர்மையானவர் என்பதாலேயே ஜெயலலிதா பூங்குன்றனை தனக்கு உதவியாளராக வைத்திருந்தார். சசிகலா குடும்பத்துடன் சேர்த்து அவரது வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    விவேக் எழுதி வாங்கிக்கொண்டார்

    விவேக் எழுதி வாங்கிக்கொண்டார்

    இந்நிலையில் வருமான வரித்துறை பூங்குன்றனிடம் நடத்திய விசாரணையில் சசிகலா குடும்பம் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தனது பெயரில் சொத்துக்கள் இருந்தது உண்மை தான் என்றும் ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவற்றையெல்லாம் விவேக் எழுதி வாங்கிக்கொண்டார் என்றும் கூறியுள்ளார்.

    பரோலில் வந்து வாங்கிய சசி

    பரோலில் வந்து வாங்கிய சசி

    மேலும் அண்மையில் பரோலில் வெளியே வந்த சசிகலாவும் சில ஆவணங்களில் கையெழுத்து கேட்டார் என்றும் உடனே தான் போட்டுக் கொடுத்துவிட்டதாகவும் பூங்குன்றன் தெரிவித்துள்ளார். இந்த தகவலால் விவேக்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொள்ள வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.

    என்ன ஆப்பு வருமோ?

    என்ன ஆப்பு வருமோ?

    மேலும் இந்த தகவல்கள் டெல்லிக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்து என்ன ஆப்பு வருமோ என விழி பிதுங்கி நிற்கிறதாம் சசிகலா குடும்பம்.

    English summary
    Vivek Jayaraman got back all the properties from Poongudran after the demise of Jayalalitha information passed to Income tax department. Income tax raid was conducted last week in Sasikala family.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X