ஜனாதிபதி தேர்தலில் கருணாநிதி வாக்களிக்கவில்லை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் உடல்நலக் குறைவால் மருத்துவர்கள் அனுமதிக்காததால் திமுக தலைவர் வாக்களிக்கவில்லை.

திமுக தலைவரும் திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாநிதி முதுமையால் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியுள்ளார். கடந்த பல மாதங்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வில் உள்ளார்.

Will Karunanidhi to cast his vote today?

இந்த நிலையில் இன்றைய ஜனாதிபதி தேர்தலில் கருணாநிதி வாக்களிக்க விரும்புவதாக கூறப்பட்டது. ஆனால் மருத்துவர்களோ தற்போதைய உடல்நிலையில் கருணாநிதி வாக்களிக்க செல்ல வேண்டாம் என கூறியுள்ளனர்.

இதனால் கருணாநிதி இன்றைய ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கமாட்டார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources said that DMK President Karunanidhi will decide as per Doctor's advice to vote in Presidential elections on today.
Please Wait while comments are loading...