தை அமாவாசை..ராமேஸ்வரத்தில் தீர்த்தவாரி..குவிந்த பக்தர்கள்..பகல் முழுவதும் கோவில் திறப்பு

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கவும் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். ராமநாத சுவாமி கோயிலில் தீர்த்தமாடவும் சாமி தரிசனம் செய்யவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் நாளை பகல் முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் வாகன நிறுத்தி போக்குவரத்து இடையூறை ஏற்படுத்தும் நபர்கள் மீதும் சட்டப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Thai Amavasai: Rameswaram temple opening throughout the day

அமாவாசை தினத்தில் ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து மறைந்த நம்முடைய முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய திதி தர்ப்பண பூஜை செய்வது வழக்கம். கோவிலில் உள்ள தீர்த்தங்களில் நீராடி விட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். தை அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

ராமேஸ்வரம் தலத்தின் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி, சிவ பூஜையும் தரிசனமும் செய்து, பித்ருக்கடன் செய்தாலே, நம் முந்தைய ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். ஸ்ரீராமபிரான் ராமேஸ்வரத்துக்கு வந்து புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவலிங்க பூஜை செய்து, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டார் என்று ஸ்தலபுராணம் தெரிவிக்கிறது.

ராமேஸ்வரம் திருக்கோயில் தலத்தில் 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. இந்த இப்பிறவியில் ஒருமுறையேனும் 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடவேண்டும் என்றும் அப்படி நீராடினால், நம் பாவங்களெல்லாம் தொலையும் நன்மைகள் நடைபெறும். கடலிலேயே கலந்திருக்கிறது அக்னி தீர்த்தம். இதில் நீராடிவிட்டே தரிசனத்துக்குச் செல்கிறார்கள் பக்தர்கள். இங்குள்ள கோடி தீர்த்தத்தில் நீராடினால் மகா புண்ணியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

ஸ்ரீராமர், சிவலிங்க அபிஷேகத்துக்குப் பயன்படுத்திய தீர்த்தம் இது. சிவ பெருமானின் அருளையும் ஸ்ரீராமரின் அருளையும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கும் மகா தீர்த்தம் இதுவாகும். தை அமாவாசை தினமான இன்று சனிக்கிழமை ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடவும், கோயிலில் சாமி தரிசனம் செய்யவும் லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் கோயிலில் தரிசனம் செய்ய வசதியாக சாமி சந்நிதி பிராகாரத்தில் இருந்து 3ஆம் பிராகாரம் சுற்றிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

தீர்த்தக் கிணறுகளில் பக்தர்கள் எளிதாகப் புனித நீராடச் செல்லும் வகையில், வடக்கு கோபுர வாசலில் இருந்து ரதவீதி வரையிலும் தடுப்புக் கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது.

பகல் 11 மணிக்கு மேல் ராமர் தங்க கருட வாகனத்திலும், ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்தக் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.
தை அமாவாைசயையொட்டி இன்று அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்து இருக்கும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் ராமேஸ்வரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து சாலை பகுதிகளில் வாகனங்களை நிறுத்தினாலும், பாம்பன் பாலத்தில் வாகன நிறுத்தி போக்குவரத்து இடையூறை ஏற்படுத்தும் நபர்கள் மீதும் சட்டப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நேற்று மதியம் முதல் இன்று 21ஆம் தேதி இரவு முழுவதும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது, மேலும் ராமேஸ்வரம் நகரத்திற்குள் வரும் வாகனம் அனைத்தும் பேருந்து நிலையத்திலிருந்து சிவகாமி நகர், சன்னிமலை, இரட்டை பிள்ளையார் கோயில் தெரு, சௌந்தர்யா அம்மன் கோயில் தெரு, சம்பை, மாங்காடு ரோடு வழியாக நகராட்சி பார்க்கிங், ஜேஜே பார்க்கிங் மற்றும் கோயில் பார்க்கில் செல்ல வேண்டும், பின்னர் பார்க்கிங் பகுதியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் மேற்கு வாசல் வழியாக திட்டக்குடி வந்தடைந்து கோயில் காவல் நிலையம், பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும் பின்னர் பார்க்கிங் பகுதியில் இருந்து தனுஷ்கோடி நோக்கி செல்லும் வாகனங்கள் மேற்கு வாசல் வழியாக திட்டக்குடி வந்தடைந்து தேவர் சிலை வழியாக செல்ல வேண்டும்.

அதேபோன்று தனுஷ்கோடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் தேவர் சிலை, ரயில்வே பீடர்ரோடு, வண்ணார் தெரு, நகர் காவல் நிலையம், பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து சாலை பகுதிகளில் வாகனங்களை நிறுத்தினாலும், பாம்பன் பாலத்தில் வாகன நிறுத்தி போக்குவரத்து இடையூறை ஏற்படுத்தும் நபர்கள் மீதும் சட்டப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தை அமாவாசை பாதுகாப்பு பணிக்காக ராமேஸ்வரம் நகர் பகுதி முழுவதும் சுமார் 1000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்ற செயல்களை தவிர்க்கும் விதமாக முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+