தேனியில் இருந்து மதுரைக்கு நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ்.. வைகை ஆற்று பாலத்தில் சோகம்
தேனி : தேனியில் இருந்து மதுரை தனியார் மருத்துவமனைக்கு நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்து விபத்தில் நான்கு பேர் காயம் அடைந்தனர். வைகை ஆற்று பாலத்தின் தடுப்புகளை மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
தேனியை சேர்ந்த பெண் மேல் சிகிச்சைக்காக தனது உறவினர்கள் இரண்டு பேருடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தேனியிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். தேனி அருகே குன்னூர் வைகை ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னே சென்ற கார் திடீரென ஆம்புலன்ஸ் முன்னே திரும்பியதால் நிலை தடுமாறிய ஆம்புலன்ஸ் பாலத்தின் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது

இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பெண் நோயாளி அவருடன் வந்த உறவினர்கள் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸில் சிக்கிக்கொண்ட நபர்களை மீட்டனர். தொடர்ந்து விபத்தில் சிக்கிய பெண் நோயாளி மற்றும் உறவினர்களை மாற்று ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
வைகை ஆற்று பாலத்தின் தடுப்புகளை மோதி நின்றதால் பெரிய அசம்பாவிதமும் இன்றி சிறிய காயத்துடன் ஆம்புலன்சில் பயணித்த நோயாளிகள் உட்பட நான்கு பேர் தப்பித்தனர். இந்த விபத்துக் குறித்து கானாவிளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் கவிழ்ந்து கிடக்கும் ஆம்புலன்ஸை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது இந்த விபத்தினால் குன்னூர் ஆற்றுப்பாலத்தில் சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தேனியில் விபத்து
முன்னதாக கடந்த பிப்ரவரி 21ம் தேதியும் விபத்து ஏற்பட்டது. தேனி மாவட்டம் போடியிலிருந்து பிப்ரவரி 21ம் தேதி காலை மதுரை நோக்கி தனியார் பேருந்து 50-க் கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பகல் 12 மணியளவில் ஆண்டிபட்டியைக் கடந்து டி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு அருகே பேருந்து சென்றது. அப்போது, திருமங்கலத்தில் திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு வடுகபட்டி நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்து திசைமாறி அருகில் உள்ள மரத்தில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது. காயமடைந்த பேருந்து பயணிகள் 37 பேர், காரில் வந்த 4 பேர் மீட்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பலத்த காயமடைந்த அல்லி நகரம் அசோக்குமார் (40), விருதுநகர் கணேஷ்ராம் (49), பண்ணைப்பட்டி போஸ் (30), மேல்மங்கலம் ராமையா (79), ஸ்ரீரங்கபுரம் கணேசன் (62), உத்தமபாளையம் சுபாஷினி (26) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications