தேனியில் கள்ளக்காதல்.. கணவனுக்கு தினமும் உணவில் பாயாசம் போட்ட பாத்திமாவுக்கு.. சரியான பாடம்
தேனி: தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகரைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் கூலித்தொழிலாளி, அவருடைய மனைவி அனீஸ் பாத்திமா.. அனீஸ் பாத்திமாவிற்கு ஜெயபாண்டி என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அதன்பின்னர் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அனீஸ் பாத்திமா தினமும் கணவனுக்கு பாசத்தோடு பரிமாறிய சாப்பாட்டால்.. இன்று அவர் உயிருடன் இல்லை.. இதில் சிக்கி கொண்டதால், அனீஸ் பாத்திமா மற்றும் அவரது காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கள்ளக்காதல் பல குடும்பங்களை காலி செய்திருக்கிறது. நன்றாக செல்லும் கடைசியில் கள்ளக்காதலால் பிரிந்து போகிறது. இதில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு பெரிய குடும்பமாக இருந்தாலும் நடக்கிறது. பெரிய குடும்பங்கள் சத்தமே இல்லாமல் விவகாரத்து வாங்கி பிரிந்துவிடும். சிறிய குடும்பங்கள் வாழ்வாதாரம் மற்றும் கௌரம் கருதி பிரிய முடியாமல் தடுமாறும்.. தவறாக முடிவெடுக்கும்.சிலர் கிரிமினலாக யோசிப்பதும் உண்டு.. அப்படி நடந்த சம்பவத்தால் இன்று ஒருவர் உயிருடன் இல்லை.

தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகரைச் சேர்ந்த 41 வயதாகும் அப்துல்லா ( கூலித்தொழிலாளி ஆவார் அவருடைய மனைவி அனீஸ் பாத்திமா (39). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் அனீஸ் பாத்திமாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதாகும் ஜெயபாண்டி என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. இது அப்துல்லாவுக்கு தெரியவந்ததால், கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இருப்பினும் அவர் தனது கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.
இந்த விவகாரம் அனீஸ் பாத்திமாவின் அண்ணன் ஜெய்லானிக்கு தெரியவந்துள்ளது. அவர் தனது தங்கையை கண்டித்தார். அதனால், அவர் தனது அண்ணன் மீது போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்துவிட்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள்.
இதற்கிடையே கள்ளக்காதலனின் தூண்டுதலின்பேரில் அனீஸ் பாத்திமா தனது கணவருக்கு உணவில் விஷத்தை (பூச்சிக்கொல்லி மருந்து) கொஞ்சம், கொஞ்சமாக கலந்து தினமும் கொடுத்து வந்தார். மெல்லக் கொல்லும் விஷமாக அவர் இதை செய்து வந்த நிலையில், உணவின் சுவையில் மாற்றம் இருப்பதை அறிந்த அப்துல்லா இந்த விஷயத்தை அனீஸ் பாத்திமாவின் அண்ணன் ஜெய்லானியிடம் கூறினார்.
இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி அப்துல்லா உயிரிழந்தார். அவருடைய இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் அனீஸ் பாத்திமா தனது கள்ளக்காதலனுடன் தலைமறைவானார். இதனால், அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக போடி டவுன் போலீஸ் நிலையத்தில் ஜெய்லானி புகார் கொடுத்தார், அதன் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடல் உள்ளுறுப்புகளை சேகரித்து, மதுரை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
ஆய்வு முடிவில், உணவில் கொஞ்சம், கொஞ்சமாக பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்ததால், அப்துல்லா உடல் நலம் பாதித்து உயிரிழந்து இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அனீஸ் பாத்திமா, ஜெயபாண்டி ஆகிய 2 பேரையும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணை முடிவில், அனீஸ் பாத்திமா மற்றும் ஜெயபாண்டி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் நேற்று தீர்ப்பளித்தார்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications