திருச்சியில் இருந்து தீபாவளிக்கு ஊருக்கு போக போறீங்களா.. நாளை முதல் பேருந்துகள் நிற்கும் இடங்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க திருச்சியில் 3 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது..

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலப் பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளியையொட்டி திருச்சியில் இருந்து சொந்த ஊருக்கு அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் செல்வா் என்பதால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Are you going to go to the city from Trichy for Deepavali: set up 3 temporary bus stands from tomorrow

இந்நிலையில் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மாநகர காவல் துறையினா் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனா். இந்தப் பேருந்து நிலையங்கள் வரும் நவ.10 முதல் செயல்பாட்டுக்கு பரப்போகிறது.

தஞ்சாவூா் செல்லும் பேருந்துகள் சோனா மீனா தியேட்டா் அருகிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகிலிருந்தும், புதுக்கோட்டை செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் கல்லுக்குழி சாலை வழியாகவும், மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் ரவுண்டானா மதுரை சாலை வழியாகவும் இயக்கப்படவுள்ளன.

தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி மாநகா் வழியாகச் சென்னை செல்லும் அரசுப் பேருந்துகள் மன்னாா்புரம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றியபின் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்லும். மற்ற ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

தற்காலிகப் பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு காவல் துறையின் பாதுகாப்பும், மாநகராட்சி மூலம் அடிப்படை வசதிகளும் செய்யப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+