• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கருணாநிதியின் டாக்டர் பிராமணர்தான்.. பிரசாந்த் கிஷோரும் பிராமணர்தான்.. அதற்கு என்ன இப்ப?.. வீரமணி

|

திருச்சி: கருணாநிதியின் டாக்டரும் பிராமணர்தான், பிரசாந்த் கிஷோரும் பிராமணர்தான். அதில் ஒன்றும் தவறில்லையே என திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தார்.

திருச்சியில் திராவிட கழக பொதுக்குழு கூட்டம் அதன் செயலாளர் சு.அறிவுக்கரசு தலைமையில் புத்தூரில் உள்ள பெரியார் மாளிகையில் நடைபெற்றது. இந்த பொதுக் குழுவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மற்றும் பொதுக் குழுவினர் கலந்து கொண்டு 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து வீரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில்: தந்தை பெரியார் மறைவுக்கு பிறகு கழகத்தையும், கல்வி நிறுவனங்களையும், கட்டிக் காத்தவருமான அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை வரும் மார்ச் 10ம் தேதி சென்னையில் வெகு சிறப்புடன் நடத்துவது.

 மத்திய அரசு அலுவலகங்கள்

மத்திய அரசு அலுவலகங்கள்

மே 16-ம் தேதி அரியலூரில் திராவிட கழக மாநில இளைஞரணி மாநாடு எழுச்சியுடன் நடத்துவது. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரும் வகையில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட மார்ச்சு 23ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

 11 நாட்கள்

11 நாட்கள்

நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை நிரந்தரமாக நீக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் ஒரு முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். திராவிடர் கழகம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 11 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக 5 மற்றும் 8-ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதை வரவேற்கிறோம்.

 தேசிய கல்விக் கொள்கை

தேசிய கல்விக் கொள்கை

இந்த நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் மார்ச் 23-ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டம் மூலம் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க அழுத்தம் கொடுக்கப்படும். இந்தப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

 பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

உயர் சாதியினரின் பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கு 10% இட ஒதுக்கீடு எனும் அரசமைப்புச் சட்டம் மோசடி திட்டமாகும். அதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்பின்னர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஒப்புதல்

ஒப்புதல்

அதற்கு பதிலளித்த அவர்,பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை நாங்கள் வரவேற்றோம். அதேசமயம் இந்த முயற்சியை வரவேற்றாலும், அது முழு முயற்சியாக இருக்க வேண்டும். அவசர அவசரமாக இல்லாமல், ஆழமாக இதை செய்து முடிக்க வேண்டும். ஐந்து மாவட்டங்களில் மட்டும் இந்த சட்டத்தை அமல்படுத்தி விட்டு விட்டால், இதர மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். அதனால் முழுமையாக சட்டத்தை கொண்டு வரவேண்டும். தற்போது மசோதா மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. முழுமையாக செயல்படுத்தியும் ஒப்புதல் பெறவேண்டும்.

பிராமணர்

பிராமணர்

மேலும், திமுகவின் தேர்தல் வியூகத்துக்கு பிராமணரான பிரசாந்த் கிஷோர் நியமனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு வீரமணி பதில் கூறுகையில், ஒரு துறையில் நிபுணரை தேர்வு செய்வதில் தவறில்லை. அவர் எந்த சாதியாக இருந்தாலும் அவரை நியமித்துக் கொள்ளலாம். நாங்கள் தனிப்பட்ட பிராமணருக்கு எதிரானவர்கள் கிடையாது.

 என்ன ஜாதி

என்ன ஜாதி

பிராமணியத்தைத்தான் எதிர்க்கிறோம். உடல்நிலை சரியில்லை என்றால் வைத்தியரை கூப்பிடும்போது அவர் எந்த சாதி என்று பார்க்க முடியாது. மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிகிச்சை அளித்தவர்கூட ஒரு பிராமணர்தான். அதனால் பிரசாந்த் கிஷோர் நியமனத்தில் தவறில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு ஜாதிவாரியாக நடத்தப்பட வேண்டியது.

 போராட்டம்

போராட்டம்

மக்களவையில் பெரும்பான்மையை தவறாகப் பயன்படுத்தி குடியுரிமை சட்டத்தில் திருத்தப்பட்டுள்ளது. இது மக்களை பிளவு படுத்தும்விதமாக உள்ளது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கைவிட வலியுறுத்தி, திக சாா்பில், மாா்ச் 23 ஆம் தேதி அரசு அலுவலக முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
 
 
English summary
Dravidar Kazha President Veeramani asks that what is wrong with Prashant Kishore is a brahmin?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X