வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க நாட்டு வரலாற்றிலேயே இதுதான் பெரும் தோல்வி.. நேரடி விவாதத்தில் விளாசிய கமலா ஹாரிஸ்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றிலேயே பெரிய தோல்வி இதுதான் என்று கொரோனா பரவல் குறித்து ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார்.

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில், போட்டியிடும் மைக் பென்ஸ், ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆகியோர் அமெரிக்க நேரப்படி இரவு 9 மணி (இந்திய நேரப்படி காலை 6.30 மணி) முதல் சுமார் ஒன்றரை மணி நேரம் நேருக்கு நேர் வாதம் செய்தனர்.

அமெரிக்காவின் சால்ட் லேக்கில் இருக்கும் உட்டா பல்கலைக் கழகத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது கொரோனா விவகாரம் குறித்து கமலா ஹாரிஸ் பேசினார்.

ஒபாமாவின் பல திட்டங்களை தடுத்த ட்ரம்ப் சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறார்- கமலா ஹாரிஸ் அதிரடி ஒபாமாவின் பல திட்டங்களை தடுத்த ட்ரம்ப் சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறார்- கமலா ஹாரிஸ் அதிரடி

மிகப்பெரும் தோல்வி

மிகப்பெரும் தோல்வி

அமெரிக்க அரசு நிர்வாக வரலாற்றில் முதல் முறையாக கொரோனா நோய் தொற்று விஷயத்தில் பெரும் தோல்வி ஏற்பட்டு உள்ளது. நமது நாட்டின் எந்த ஒரு அதிபர் காலத்திலும் இல்லாத அளவுக்கு, மிகப்பெரும் தோல்வியை இப்போதுதான் அமெரிக்க மக்கள் பார்த்துள்ளனர்.

மூடி மறைத்த ட்ரம்ப் நிர்வாகம்

மூடி மறைத்த ட்ரம்ப் நிர்வாகம்

அதிபருக்கும் துணை அதிபருக்கும் கொரோனா பரவல் தொடர்பாக ஜனவரி 28 ஆம் தேதியே தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடப்பதை மூடி மறைக்கத்தான் முற்பட்டனர். இன்னும் சொல்லப்போனால் கொரோனா நோய் பரவல் என்பது ஒரு வதந்தி என்று அதிபர் தெரிவித்தார்.

காப்பாற்றினோம்

காப்பாற்றினோம்

இவ்வாறு கமலா ஹாரிஸ் வைத்த வாதத்திற்கு பதில் வழங்கி பேசிய மைக் பென்ஸ், சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு விமான போக்குவரத்து உள்ளிட்ட மக்கள் வரத்து ரத்து செய்யப்பட்டது மிக முக்கியமான முடிவு. இதன்மூலம் பல மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா தடுப்பு மருந்து

அமெரிக்க மக்களின் ஆரோக்கியம் தான் முக்கியம் என்று முதல் நாள் முதலே அதிபர் செயல்பட்டு வருகிறார். டொனால்ட் ட்ரம்ப் தலைமையின்கீழ் பதில் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த வருட இறுதிக்குள் பல மில்லியன் கொரோனா நோய் தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்படும் என்று நம்புகிறேன்.

பாரிஸ் ஒப்பந்தம்

பாரிஸ் ஒப்பந்தம்

உலகம் வெப்பமயமாதலை தடுப்பதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் கீழுள்ள பல்வேறு நாடுகளும் செய்ய முடியாத அளவுக்கு CO2 வாயு வெளியேற்றத்தை அமெரிக்கா வெகுவாக குறைந்துள்ளது. இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மூலமாக சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட்டுள்ளது. ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரீஷ் அமெரிக்காவையும் பழைய படியும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு சென்று விட்டு விடுவார்கள். அமெரிக்காவின் எரிபொருள் சக்தியை அது நசுக்கி விடும் என்றார்.

உண்மையில்லை

உண்மையில்லை

கமலா ஹாரிஸ் மறுபடி தனது வாதத்தை முன் வைக்கும்போது, கொரோனா பரவும் காலத்தில் பல மக்களுக்கும், காப்பீடு வசதி பறிக்கப்பட்டது. கொரோனா தொற்று பற்றி வெள்ளை மாளிகை எப்போதுமே உண்மையான தகவல்களை தெரிவித்து வருவதாக அதிபர் தெரிவித்தார். ஆனால் அது உண்மையில்லை. அமெரிக்க மக்களை மதிப்பதாக இருந்தால் நீங்கள் அவர்களிடம் உண்மையை சொல்லி இருக்க வேண்டும்.

கமலா ஹாரிஸ் உருக்கம்

கமலா ஹாரிஸ் உருக்கம்

எனது தாய் 19 வயதில் அமெரிக்கா வந்தார். அவரது 25வது வயதில் நான் பிறந்தேன். நான் இங்கு இருப்பது கண்டிப்பாக அவரை பெருமை படுத்தத்தான். மக்களை உயரத்துக்கு தூக்கி விடுவதுதான் எனது பணியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Senator Kamala Harris, running mate to US Democratic presidential candidate Joe Biden, on Thursday (October 8) slammed US President Donald Trump and branded the country's response to the Covid-19 pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X