"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
வாஷிங்டன்: வளைகுடாவில் நடக்கும் போர் 5வது வாரமாகத் தொடர்கிறது. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடந்தாலும் மறுபுறம் மிரட்டல்கள் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கிடையே ஈரானுக்கு இறுதி எச்சரிக்கையை விடுக்கும் வகையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவில்லை என்றால் மிக மோசமான பேரழிவைச் சந்திக்க நேரிடும் எனக் கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 5வது வாரமாகத் தொடர்கிறது. இந்த போரால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் தொடர்கிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் இதனால் சர்வதேச அளவிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதாவது வளைகுடா போரின் வலிகளை ஒட்டுமொத்த உலகமும் எதிர்கொள்கிறது.

டிரம்ப்
இந்த போரை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும் கூட அதில் பெரிய பலன் கிடைப்பதில்லை. இதற்கிடையே வளைகுடா போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில பகீர் தகவல்களைக் கூறியுள்ளார். ஈரானில் அமெரிக்கா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர, தீவிரப் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக டிரம்ப் தெரிவித்தார். விரைவில் ஓர் ஒப்பந்தம் எட்டப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதேநேரம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை அல்லது ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படவில்லை என்றால் ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா மிகப் பெரிய ஒரு தாக்குதலை நடத்தும் என அவர் எச்சரித்தார்.
மிரட்டல்
இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், "ஈரானில் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர, ஒரு புதிய, நியாயமான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் இப்போது பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால், அல்லது ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக சரக்கு கப்பல்களுக்குத் திறக்கப்படவில்லை என்றால்.. ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், கார்க் தீவு மற்றும் கடல் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் ஆகியவற்றை அமெரிக்கா முழுமையாகத் தகர்க்கும்.
இதுவரை நாங்கள் இதன் மீது ஒரு தாக்குதல் கூட நடத்தாமல் இருந்து வருகிறோம். ஈரானின் 47 ஆண்டுக்கால பயங்கரவாத சகாப்தத்தில் எங்கள் பல வீரர்களைக் கொன்றதற்கான பதிலடியாகவே இந்த நடவடிக்கைகள் இருக்கும்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார். மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், டிரம்பின் இந்த போஸ்ட் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
குழப்பம் டிரம்ப்
முன்னதாக கடந்த வாரம் தான் ஈரான் மீதான மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் முதலில் மிரட்டினார். பிறகு அவரே திடீரென அடுத்த 10 நாட்களுக்குத் தாக்குதலை நிறுத்தி வைப்பதாகவும் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக ஏப்ரல் 6ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு எரிசக்தி உட்கட்டமைப்பின் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரான்
ஹார்முஸ் ஜலசந்தியில் வழக்கமான சரக்கு கப்பல் போக்குவரத்தை ஈரான் அனுமதிக்க வேண்டும் என அமெரிக்கா பிரஷர் போடுகிறது. ஆனால், இந்தியா உட்பட 5 நாடுகளின் சரக்கு கப்பல்களை மட்டுமே ஈரான் அனுமதிக்கிறது. இது போர் காலம் என்பதால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் சரக்கு கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதிக்க முடியாது என ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை!














Click it and Unblock the Notifications