Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு | திருக்குறள் | மானம் | ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் திருக்குறள்

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் திருக்குறள்

குறள் பால்
குறள் இயல்
அதிகாரம்
குறள் விளக்கம்
967 ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று

மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.
— மு. வரதராசன்

தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்
— கலைஞர்

இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.
— சாலமன் பாப்பையா

தன்னை இகழ்பவரின் பின்னே சென்று பொருள் பெற்று, அதனால் உயிர்வாழ்தலைவிட, இறந்தவன் என்று சொல்லப் படுதலே ஒருவனுக்கு நன்மை ஆகும்
— புலியூர்க் கேசிகன்

ஒத்திசைவு இல்லாமல் புரியாத ஒருவர் பின் சென்று வாழும் அந்த நிலையைவிட கொட்டவன் எனப்படுதல் நன்று.
— சிவயோகி சிவகுமார்

ஒருவன் தன்னை இகழ்வார்பின் சென்று வாழும் வாழ்க்கையின், அவர்பால் செல்லாத அந்நிலையே நின்று கெட்டானென்று பிறரால் சொல்லப்படுதல் நன்று.
— மணக்குடவர்

ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் - தன்னை இகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று அதனால் ஒருவன் உயிர் வாழ்தலின்; அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று - அது செய்யாது இறந்தான் என்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று. (ஒட்டுதல் - பொருந்துதல். 'அந்நிலையே' என்றது, செல்லாத முன்னை நிலைக்கண்ணே நின்று என்றவாறு, அப்பொழுதே என்றும் ஆம். 'புகழும் புத்தேள் நாடும் பயவாதேனும் பொருள் பெற்று உயிர் வாழ்வாம்' என்பாரை நோக்கிக் கூறியது.).
— பரிமேலழகர்

English Couplet:

Better 'twere said, 'He's perished!' than to gain
The means to live, following in foeman's train.

Couplet Explanation:

It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him.

Transliteration (Tamil to English):

ottaarpin sendroruvan vaazhdhalin anhnhilaiyae
kettaan enappatudhal nandru

மொத்தம் 133 அதிகாரங்கள்
967 of 1330

மேலும் மானம் குறள்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+