Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு | திருக்குறள் | கூடா நட்பு | பகைநட்பாங் காலம் வருங்கால் திருக்குறள்

பகைநட்பாங் காலம் வருங்கால் திருக்குறள்

குறள் பால்
குறள் இயல்
அதிகாரம்
குறள் விளக்கம்
830 பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
டகநட் பொரீஇ விடல்

பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.
— மு. வரதராசன்

பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்
— கலைஞர்

நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.
— சாலமன் பாப்பையா

பகைவரும் நட்பாகப் பழகுவதற்கு ஏற்ற காலம் வருங்காலத்திலே, அவருடன் முகத்தளவால் நட்புச் செய்து, உள்ளத்தில் போற்றாது நீக்கிவிடுதல் வேண்டும்
— புலியூர்க் கேசிகன்

பகைவரும் நட்பாகவும் காலத்தில் சிரித்த முகத்துடனே நட்பினை மனதளவில் விலக்கிட வேண்டும்.
— சிவயோகி சிவகுமார்

பகைவர் நட்பாங்காலம் வந்தவிடத்து, முகத்தால் நட்பினைச் செய்து அகநட்பு நீங்கவிடுக.
— மணக்குடவர்

பகை நட்பாம் காலம் வருங்கால் - தம் பகைவர் தமக்கு நட்டாரா யொழுகுங்காலம் வந்தால்; முகம் நட்டு அகம் ஒரீஇ விடல் - தாமும் அவரோடு முகத்தால் நட்புச் செய்து அகத்தால் அதனைவிட்டுப் பின் அதுவும் தவிர்க. (அக்காலமாவது, தம்மானும் பகையென்று வெளிப்பட நீக்கலாகாத அளவு. இதனானே, ஆமளவெல்லாம் நீக்குக என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் அந்நட்பினை ஒழுகுமாறு கூறப்பட்டது.).
— பரிமேலழகர்

English Couplet:

When time shall come that foes as friends appear,
Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear.

Couplet Explanation:

When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former).

Transliteration (Tamil to English):

pakainhatpaam kaalam varungaal mukanhattu
akanhatpu oreei vidal

மொத்தம் 133 அதிகாரங்கள்
830 of 1330

மேலும் கூடா நட்பு குறள்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+