Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு | திருக்குறள் | சுற்றந் தழால் | சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் திருக்குறள்

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் திருக்குறள்

குறள் பால்
குறள் இயல்
அதிகாரம்
குறள் விளக்கம்
524 சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்

சுற்றத்தாரால்‌ சுற்றப்படும்படியாக அவர்களைத்‌ தழுவி அன்பாக வாழ்தல்‌ ஒருவன்‌ செல்வத்தைப்‌ பெற்றதனால்‌ பெற்ற பயனாகும்‌.
— மு. வரதராசன்

தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்
— கலைஞர்

தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.
— சாலமன் பாப்பையா

சுற்றத்தாரால் தான் சூழ்ந்திருக்கும்படியாக வாழ்தலே, ஒருவன் செல்வத்தைப் பெற்றதனாலே அடைந்த பயனாக இருக்க வேண்டும்
— புலியூர்க் கேசிகன்

அக்கம் பக்கம் உள்ள உறவுகளுடன் இணைந்து வாழ்வது செல்வத்தால் வரும் பயன்.
— சிவயோகி சிவகுமார்

சுற்றத்தாராலே சூழப்பட ஒழுகுவது, செல்வத்தைப் பெற்றவதனால் உண்டான பயன். இது சுற்றஞ் சூழ்ந்து வருவதாக ஒழுக வேண்டுமென்றது.
— மணக்குடவர்

செல்வம் பெற்றத்தால் பெற்ற பயன் - செல்வம் பெற்ற அதனால் ஒருவன் பெற்ற பயனாவது, சுற்றத்தால் தான் சுற்றப்பட ஒழுகல் - தன் சுற்றத்தால் தான் சூழப்படும் வகை அதனைத் தழீஇ ஒழுகுதல். (பெற்ற என்பதனுள் அகரமும் அதனான் என்பதனுள் அன்சாரியையும்தொடைநோக்கி விகாரத்தால் தொக்கன. இவ் வொழுக்குப்பகையின்றி அரசாள்தற்கு ஏதுவாகலின், இதனைச் செல்வத்திற்குப்பயன் என்றார். இவை மூன்று பாட்டானும் சுற்றந் தழால்செல்வத்திற்கு ஏதுவும் அரணும் பயனும் ஆம் என்பதுகூறப்பட்டது.).
— பரிமேலழகர்

English Couplet:

The profit gained by wealth's increase,
Is living compassed round by relatives in peace.

Couplet Explanation:

To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth.

Transliteration (Tamil to English):

sutraththaal sutrap padaozhukal selvandhaan
petraththaal petra payan

மொத்தம் 133 அதிகாரங்கள்
524 of 1330

மேலும் சுற்றந் தழால் குறள்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+