திண்டுக்கலில் தொடரும் விபரீதங்கள்... நாகல்நகரில் இளைஞர் படுகொலை!
திண்டுக்கல் நாகல் நகரில் இளைஞர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் : திண்டுக்கலில் அண்மையில் தொடர் கொலைச் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் நாகல் நகரில் இன்று இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் வெடிக் கொன்றவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் திண்டுக்கல் நாகல்நகர் அருகில் உள்ள பாவா லாட்ஜ் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த மதுரை வீரன் என்பவரை அவரையும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் மதுரை வீரன் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

வீராவின் தம்பி சரவணன் என்.வி.ஜி.பி. தியேட்டர் ரோட்டில் சவுராஸ்டிரா காலனியில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரையும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடியது. இதில் சரவணன் துடிதுடித்து இறந்தார். இதே போன்று இவர்களின் சகோதரர் பாலமுருகனும் மர்ம நபர்களால் அன்றைய தினமே வெட்டிக் கொல்லப்பட்டார்.
அடுத்தடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி உள்பட 3 பேர் அடுத்தடுத்து வெட்டி கொலை செய்யப்பட்டதால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தொடர் கொலைகளுக்கு பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் நாகல் நகர் பகுதியில் விக்கி என்ற இளைஞரை மர்ம நபர்கள் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலைச் சம்பவத்தால் திண்டுக்கல் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications