Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வானிலிருந்து "பறந்து" வந்து கார் மீது விழுந்த 500 கிலோ பசு மாடு...!

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: பிரான்சில் ஒரு பசு மாடு பறந்து வந்து கார் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாடு வந்து விழுந்ததால் கார் பானட் லேசாக சேதமடைந்தது. ஸ்பெயின் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பெர்தஸ் என்ற நகருக்கு அருகே உள்ள பைரனஸ் மலைப் பகுதியில் உள்ள சாலையில் அந்தக் கார் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. அந்தக் காரை ஓட்டிய நபர் தனது வளர்ப்பு மகனுடன் போய்க் கொண்டிருந்தார்.

When a 500kg cow fell from sky on a car bonnet

அப்போது திடீரென ஒரு பிரமாண்ட பசு மாடு வேகமாக வந்து அவர்களது கார் பேனட் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் ஆபத்தில்லை. காரும் விபத்துக்குள்ளாகவில்லை. அதேசமயம், அந்த பசு மாடு பரிதாபமாக இறந்து போனது.

கார் லேசான சேதமடைந்தது. அந்தப் பகுதியில் இந்த சம்பவத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மலைக்கு மேலே அந்த மாடு போய்க் கொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+