2022-ல் அதிகமான ரசிகர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகைகள்..இந்த 10 நடிகைகளுக்கு இவ்வளவு ரசிகர்களா?
சென்னை: தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்வதன் அடிப்படையில் முதல் 10 இடங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னணி தொலைக்காட்சிகளில் நடிக்கும் நடிகைகளில் யாரும் எதிர்பார்க்காத பல நடிகைகளுக்கு அதிகமான ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பின் தொடர்கின்றனர். இந்த விவரங்கள் இதோ,

1,ஆலியா மானசா
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் மூலமாக சின்னத்திரை ரசிகர்களின் மனதிலும் இளைஞர்களும் மனதையும் கொள்ளை கொண்ட ஆலியா சமூக வலைத்தளத்திலும் அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தோடு முதல் இடத்தில் இருந்து வருகிறார் இவருக்கு ரசிகர்கள் அதிக அளவில் இருப்பதாலே மீண்டும் மீண்டும் சீரியலில் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் ஆலியா மானசாவை நான்கு புள்ளி இரண்டு மில்லியன் ஃபாலோவர்ஸ் பின் தொடர்கின்றனர்.

2, ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்த சிவானி நாராயணன் சீரியலுக்கு வருவதற்கு முன்பே சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக தான் இருந்திருக்கிறார். அதிலிருந்து தான் இவருக்கு சீரியலில் நடிப்பதற்கே வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இந்த நிலையில் தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். ஆனாலும் அவரையும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்பு வருகின்றனர். அவருக்கு இப்ப வரைக்கும் 3.5 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கின்றனர்.

3, தர்ஷா குப்தா
ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்த தர்ஷா குப்தா அதற்குப் பிறகு ஒரு சில சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்து வந்தார்.தற்போது சீரியல் களுக்கு டாடா காட்டி வெள்ளி திரைக்கு சென்றிருந்தாலும், இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும், விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளிலும் அப்போ அப்போ தலை காட்டி வருகிறார். இவரும் சமூக வலைத்தளத்தில் இப்ப வரைக்கும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். அதுவும் கொரோனா காலகட்டத்தில் இவர் போட்டோ சூட் மூலமாகவே அதிகமான ரசிகர்களை கவர்ந்து விட்டார். இந்த நிலையில் இவர் 2.1மில்லியன் ரசிகர்களோடு மூன்றாவது இடத்தில் பிடித்திருக்கிறார்.

4, கேப்ரில்லா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் இரண்டில் கதாநாயகியாக நடித்துவரும் கேப்பிரில்லா ஏற்கனவே விஜய் டிவியில் மூலமாக பரீட்சையமானவர்தான். டான்ஸ் ஷோவாக இருந்தாலும் சரி பிக் பாஸ் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி ஒரு கை பார்ப்போம் என்று இவர் அனைத்திலும் கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்றிருக்கிறார் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் 1.9 மில்லியன் ஃபாலோவர்ஸ்களோடு நான்காவது இடத்தில் பிடித்திருக்கிறார்.

4, ரித்திகா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வரும் ரித்திகா சமீபத்தில் தான் திருமணத்தை முடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் பிரபலம் அடைந்திருந்தாலும் சமூக வலைத்தளத்திலும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரித்திகாவை 1.9 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து ரித்திகாவும் நாலாவது இடத்தில் இருக்கிறார்.

5, ரச்சிதா மகாலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக இப்ப வரைக்கும் சின்னத்திரையின் மீனாட்சி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ரச்சிதா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இவருக்கு அதிகமான சின்னத்திரை ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதனால் தான் தற்போது கூட அவர் ஒவ்வொரு முறையும் அதிகமான வாக்குகள் பெற்று பாதுகாக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவருக்கு 1.3 மில்லியன் பாலோவர்ஸ் பின் தொடர்ந்து இவரும் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

5, சைத்ரா ரெட்டி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகி கயலாக நடிக்கும் சைத்ரா ரெட்டி சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவ் தான் இருக்கிறார். இவர் அவருடைய தோழிகளோடு எடுக்கும் போட்டோஸ் வீடியோக்கள் என ஆரம்பத்தில் இருந்து சமூக வலைத்தளத்தை தெறிக்க விட்டு வந்தார். ரீல்ஸ் வீடியோவாக இருந்தாலும் சரி, போட்டோ ஷூட்டாக இருந்தாலும் சரி, தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டு இவர் அதில் கலக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது இவருக்கு 1.3 மில்லியன் பாலோவர்ஸ் உடன் இவரும் ஐந்தாவது இடத்தில் பிடித்திருக்கிறார்.

5,காவியா அறிவுமணி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து தற்போது அந்த சீரியலை விட்டு விலகிய காவியா சமூக வலைத்தளத்திலும் பலருக்கும் பரீட்சையமானவர்தான். இவர் ஆரம்பமானது பாரதி கண்ணம்மா சீரியலாக இருந்தாலும் சரி, இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான். விஜே சித்ராவின் மறைவிற்குப் பிறகு அந்த இடத்திற்கு காவியா தான் முல்லையாக நடித்து வந்தார். ஆனால் திடீரென்று அந்த சீரியலை விட்டு விலகி இருந்தாலும் இவருக்கு 1.3 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கின்றனர். இதனால் இவரும் ஐந்தாவது இடத்தில் தான் இருந்து வருகிறார். மொத்தத்தில் மூன்று நடிகைகள் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றனர்.

6,ஃபரீனா ஆசாத்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் வில்லி கேரக்டரில் அனைவரையும் மிரட்டி கொண்டிருக்கும் ஃபரீனா சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நடிகைகளுக்கு போலவே வில்லியையும் அதிகமாக ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்பதை இவருடைய பாலோவர்ஸ்களை வைத்து தெரிந்து கொள்ள முடிகிறது. திரைப்பட நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்களே என்று பலரும் வியந்து பார்க்கின்றனர். இவருக்கு 1.2 மில்லியன் பாலோவர்ஸ் பின் தொடர்வதால் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

6,ரேஷ்மா பசுபுலெட்டி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து பலருடைய திட்டல்களையும் அனுதாபங்களையும் ஒருசேர பெற்று வரும் ரேஷ்மா சமூக வலைத்தளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். சூட்டிங் ஸ்பாட்டில் கிடைக்கும் டைம் எல்லாம் இவர் ரீல்ஸ் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தட்டி விட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் போட்டோ ஷூட்டும் என்னை மிஞ்ச யாரும் இல்லை என்கிற விதமாகத்தான் இவர் விதவிதமாக குவித்து வருவார். இதனால் இவரை 1.2 மில்லியன் ஃபாலோவர்ஸ் பின் தொடர்ந்து இவரும் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

7,ஹேமா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரில் நடிக்கும் ஹேமா சீரியல் போலவே சமூக வலைத்தளத்திலும் துறுதுறுவென இருந்து வருகிறார். சீரியலில் இவர்தான் காமெடி கேரக்டராக இருந்து வருகிறார். இவர் என்னதான் பேசினாலும் அது கடைசியில் காமெடியாக முடிந்து விடுகிறது. ஆனாலும் சமூக வலைதளத்தில் அடிக்கடி போட்டோ சூட் மூலமாக ஆக்டிவாகவே வைத்து வருகிறார் .அந்த வகையில் இவரை 1 மில்லியன் ஃபாலோவர்ஸ் பின் தொடர்கின்றனர். இதனால் இவர் ஏழாவது இடத்தில் இருக்கிறார்.
-
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications