Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

" யாருக்கும் இப்படி நடக்க கூடாது” மனம் திறந்த பப்லு.. இவருடைய வாழ்க்கையில் இத்தனை சோகங்களா..!??

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பப்லு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான நினைவுகளை கூறி யாருடைய வாழ்க்கையிலும் இந்த மாதிரி ஒரு நிகழ்வு நடந்து விடக்கூடாது என்று உருக்கமாக தெரிவித்து இருக்கிறார்.

பப்லுவின் ஒரே மகனைக் குறித்து தனக்கு இருக்கும் வேதனையை வெளிக்காட்டி அதுபோல யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்று அனைவரிடமும் அன்பாக கூறி இருக்கிறார்.

சினிமாக்களில் புகழின் உச்சியில் இருந்த பப்லு சினிமாவை விட்டு விலகி தற்போது மீண்டும் நடிக்க வந்ததற்கான காரணத்தை கேட்டு ரசிகர்கள் பீல் பண்ணி இருக்கிறார்கள்.

டாக்டர்கள் கூறிய பதில்

டாக்டர்கள் கூறிய பதில்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் மீராவின் அப்பாவாக நடித்து வரும் பப்லு வெள்ளித்திரையில் பலருக்கும் பரீட்சையமான நடிகர். இவருடைய ஒரு முகம் அனைவருக்கும் தெரிந்தாலும் இவருடைய வாழ்க்கையின் மறுபக்கம் பலருக்கும் தெரியாமல் தான் இருந்து வந்துள்ளது. அதனை தற்போது வெளிப்படையாக இவர் போகும் இடங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். இவர் பேசுவதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் ஃபீல் பண்ணி வருகின்றனர். தன்னுடைய ஒரே மகனுக்கு ஆட்டிசம் பாதித்துவிட்டது என்று மருத்துவர்கள் சொன்னபோது இவர் நம்பவே இல்லையாம். ஒரு டாக்டருக்கு, பல டாக்டரை இவர் சந்தித்து மகனைக் குறித்து செக் பண்ணின பிறகு அனைவரும் கூறிய ஒரே பதில் மகனுக்கு ஆட்டிசம் என்று தானாம். அதன் பிறகு இவருடைய வாழ்க்கையில் மீது இவருக்கு பெரிய வெறுப்பு ஏற்பட்டு விட்டதாம்.

சினிமாவை விட்டு விலகல்

சினிமாவை விட்டு விலகல்

தான் இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்து சம்பாதித்தாலும் தன்னுடைய ஒரே மகனுக்கு இப்படி இருப்பதால், எதற்கு இனி சம்பாதிக்க வேண்டும் என்று வெறுப்போடு மன அழுத்தமும் இவருக்கு ஏற்பட்டு விட்டதாம். அந்த கோபத்தை இவருடைய மகன் மீதும் மனைவியின் மீதும், பெற்றோர் மீதும் முந்தைய தலைமுறை மீதும் இவருக்கு அதிகமாக வெறுப்பு ஏற்பட்டு அனைவரிடமும் கோபத்தை காட்டி இருக்கிறார். மகனை நினைத்து இவருக்கு கிடைத்த ஏமாற்றம் பெரிய அளவில் இவருக்கு மன அழுத்தத்தை கொடுத்து இருந்ததாம். அந்த நேரத்தில் பப்லு ஒரே நேரத்தில் 18 படங்களில் நடித்துக் கொண்டிருந்தாராம். என்னதான் தான் இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய மகனின் நிலைமை இப்படி இருப்பதால் நான் இனி யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்று வெறுப்போடு தான் நடிப்பை விட்டு விட்டு சொந்த ஊருக்கு கிளம்பி விட்டாராம்.

மகனை நேசிக்கும் பப்லு

மகனை நேசிக்கும் பப்லு

ஆறு வருடங்கள் நடிப்பை விட்டிருந்த பப்லுவிற்கு அதற்கு பிறகு தான், தான் செய்தது எவ்வளவு பெரிய தப்பு என்று புரிந்து கொள்ள முடிந்ததாம். தன் மகன் எப்போதுமே குழந்தையாக இருப்பான் என்று புரிந்து கொண்ட பப்லு அவர் மீது அதிகமாக பாசத்தை செலுத்த ஆரம்பித்து விட்டாராம். பொதுவாக அடுத்த குழந்தைகள் என்றால் ஒரு குறிப்பிட்ட வயதில் அவர்கள் மெச்சூரிட்டி வந்து தங்களை விட்டு பிரிந்து விடுவார்கள். ஆனால், எத்தனை வயது வந்தாலும் தன்னுடைய மகன் குழந்தையாகவே இருப்பான். அதனால் அவனுடைய சின்ன சின்ன விஷயங்கள் கூட தனக்கு மகிழ்ச்சி கொடுக்கும் என்பதை புரிந்து கொண்டு அவரோடு நெருங்கி பழக தொடங்கி விட்டாராம். இப்போது பப்லுவின் மகனுக்கு 25 வயது ஆகிறதாம். ஆனாலும் குழந்தையாக இருக்கும் அவர் செய்யும் சின்ன சின்ன செயல்கள் கூட பப்லுவுக்கு பெரியதாக தான் தெரிகிறதாம்.

இந்த தப்பை இனி யாரும் செய்யாதிங்க

இந்த தப்பை இனி யாரும் செய்யாதிங்க

அதனால் தன்னைப்போல யாரும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை நினைத்து கோபித்துக் கொண்டு குழந்தைகள் மீது வெறுப்பை காட்டி விடக்கூடாது என்று இவர் போகும் இடங்களில் எல்லாம் அதைக் குறித்து பேசி வருகிறார். அது மட்டும் அல்லாமல் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் மெதுவாக தங்களுடைய வேலைகளை பழகிக் கொள்கிறார்கள். தன்னுடைய மகன் எந்த வேலையும் செய்து விட மாட்டான் என்று எத்தனையோ பேர் கூறி இருந்தாலும், தற்போது அவனே தனியாக பாத்ரூம் செல்கிறான். டிரஸ் அணிந்து கொள்கிறான், எல்லோரையும் போல தான் இருக்கிறான் கொஞ்சம் லேட்டாக அவனுடைய வேலைகளை செய்ய துவங்கி இருக்கிறான். அவ்வளவுதான்..!! நாம எப்போதும் பாசத்தை மட்டும் காட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று பப்லு கூறி இருக்கிறார். நடிகர் பப்லு ஒரு நடிகராக பலருக்கும் அறிமுகமாகி இருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் அவருடைய தந்தை, மனைவி அனைவருமே நடிகர் தான். பப்லு உடற்பயிற்சி செய்வதில் தீவிரமான நபர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அவருடைய சோகமான வாழ்க்கை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் தான் செய்த தவறை யாரும் செய்து விடக்கூடாது என்று பப்லு பல பேட்டிகளில் ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+