“இனி வாழ்நாள் முழுசாவே ஒன்லி ஹேப்பி பீலிங்” நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணத்திற்கு வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: சினிமா உலகில் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண் தற்போது தன்னுடைய திருமணத்தை பிரம்மாண்டமாக முடித்து இருக்கிறார்.
பெண் ரசிகைகளுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் வாழ்த்துக்கள் அதிகரித்து வருகிறது.
திருமணத்தில் மனைவியோடு இருக்கும் ஹரிஷ் கல்யாண் புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

ஹரிஷ் கல்யாண் திரைப்படங்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ஹரிஷ் கல்யாண் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருகிறார். அதற்கு பிறகு இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் 2010 இல் வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தில் அன்பு கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹரிஸ் கல்யாண் அதற்குப் பிறகு அறிந்து அறிந்து, சட்டப்படி குற்றம், வில் அம்பு ,தாராள பிரபு என பல நடித்திருக்கிறார். தற்போது இவர் டீசல் திரைப்படத்தை நடித்து முடித்து இருக்கிறார் .இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இருக்கிறது.

மனைவியை குறித்த பதிவு
பிக் பாஸ் தமிழ் சீசன் ஒன்றின் வைல்ட் கார்ட் கண்டஸ்டண்டாக உள்ளே வந்த ஹரிஷ் கல்யாண் இரண்டாவது ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றார். தற்போது இவர் திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைத்து இருக்கிறார். தன்னுடைய மனைவியின் புகைப்படத்தை கடந்த மாதம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். இது ஒரு நிச்சயப்படுத்தப்பட்ட திருமணம் அவர் பெயர் நர்மதா உதயகுமார் .நாங்கள் எங்கள் குடும்பத்தின் மூலமாக சந்தித்தோம். ஒருவரை ஒருவர் விரும்பினோம். அப்படித்தான் இந்த பயணம் தொடங்கியது. இப்படி ஒரு வாழ்க்கை துணை கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அதில் தனது திருமணத்தையும் மனைவியை பற்றி பதிவினை வெளியிட்டு இருந்தார்.

திருமணம் நடைபெற்றது
இந்த நிலையில் இன்று தன்னுடைய திருமணத்தை ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் காலை 10:30 மணிக்குள் முடித்திருக்கிறார். இவருடைய திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளம் எங்கும் பரவி வருகிறது .சின்னத்திரை, வெள்ளித்திரை ரசிகர்கள் பலரும் ஹரிஷ் கல்யாண் திருமணத்திற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பல திறை பிரபலங்களும் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டுள்கொண்டுள்ளனர்.

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்கள்
பட்டு வேட்ஸ்டி சட்டையில் மணமகன் ஹரிஷ் கல்யாண் சிவப்பு கலர் கல்யாண புடவையில் தேவதையாக வீற்றிருக்கும் நர்மதாவின் கழுத்தில் தாலி கட்டிய புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைத்து ஹார்ட் பிரேக் சிம்பிள் கொடுத்து வருகிறார்கள். என்ன தான் சிலர் மனதுக்குள் ஃபீலிங்க் வைத்துக் கொண்டிருந்தாலும், வெளியே மட்டும் லைக்குகள் குவிந்து வருகிறது. இந்த திருமண நாளின் மூலமாக ஹரிஷ் கல்யாண் அவருடைய சொந்த வாழ்க்கையிலும், திரைத்துறை வாழ்க்கையிலும் அதிகமான வளர்ச்சி அடைய வேண்டும் என்று பலரும் மனதார வாழ்த்து வருவதாக கருத்து கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications