சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து! வீல் சேரில் வந்த விநாயகன்.. மோசமான கமெண்ட்களுக்கு பதிலடி
சென்னை:தமிழ், மலையாள திரையுலகின் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக இருக்கும் விநாயகன், தற்போது 'ஆடு 3' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தமிழகத்தின் திருச்செந்தூரில் நடைபெற்று வந்தது. அப்போது படத்தின் சூட்டிங்கில் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கும் போது, நடந்த ஆக்சிடென்டில் விநாயகனுக்கு பெரிய அடிபட்டுவிட்டது.
சண்டைக் காட்சியின் போது அவரது கழுத்துப் பகுதியில் உள்ள நரம்பு பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற படக்குழு, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அட்மிட் செய்திருக்கின்றனர். அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் விநாயகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வீடு திரும்பிய விநாயகன்
மருத்துவமனையில் சில நாட்கள் ட்ரீட்மென்ட்க்கு பிறகு, கடந்த புதன்கிழமை விநாயகன் வீடு திரும்பியுள்ளார். அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் மருத்துவர்கள், குறைந்தது இரண்டு வாரங்கள் முழுமையான ஓய்வு அவசியம் என்று அட்வைஸ் கொடுத்து இருக்கின்றனர். இதனால், 'ஆடு 3' படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைதளங்களில் எழுந்த சர்ச்சை
இந்நிலையில், விநாயகன் காயமடைந்த செய்தியைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் சில நெட்டிசன்கள் அவரைப் பற்றி விமர்சன கருத்துகளை பதிவிட்டனர். குறிப்பாக, அவருக்கு ஆக்சிடென்ட் ஆனது கூட "கர்மாவின் விளைவு" என குறிப்பிட்டு சிலர் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்துகள் ரசிகர்களிடையிலும் திரையுலக வட்டாரங்களிலும் விவாதத்தை கிளப்பின.
விமர்சனங்களுக்கு விநாயகனின் பதில்
இந்த விமர்சனங்களுக்கு, விநாயகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு பதிலளித்துள்ளார். அதில், தனது காயம் தவறான செயல்களின் விளைவு அல்ல என்றும், தன்னைச் சுற்றியிருந்த சிலரின் அலட்சியத்தால் ஏற்பட்டதாகவும் அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
"அறிவாளிகள் போல நடித்து, அறிவில்லாதவர்களை நம்பி வேலை செய்தபோதுதான் இந்த சம்பவம் நடந்தது. நான் வாழ்ந்தாலும், இல்லையெனினும் இந்த உலகில் எதுவும் மாறப்போவதில்லை," என அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.
கர்மா குறித்த விமர்சனங்களுக்கு எதிர்ப்பு
மேலும், 'கர்மா' குறித்து தன்னிடம் பாடம் புகட்ட வேண்டிய அவசியம் இல்லை என கூறிய விநாயகன், சாபங்களும் போலியான அனுதாபங்களும் வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். "விநாயகன் திமிர் பிடித்தவன் அல்ல. சுயமரியாதையுடன் வாழும் மனிதன். காலம் முடியும் வரை நான் பேசுவேன்," என அவர் தனது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார்.
பதிவின் இறுதியில், தேசபக்தி உணர்வுடன் 'ஜெய் ஹிந்த்' என்றும், கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விநாயகனின் இந்த வெளிப்படையான கருத்துக்கு பல ரசிகர்களும், திரையுலக நண்பர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சிலர் அவர் தன்னைப் பற்றிய நெகட்டிவ் கருத்துக்களுக்கு உடைந்து போகாமல் தைரியமாக பதில் கொடுத்ததை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் நடிகர்களின் உடல்நிலை குறித்து கருத்து கூறும் போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தும் பலரிடமிருந்து எழுந்துள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications