Devayani: மணப்பெண்னாக இனியா.. சந்தோஷத்தில் தேவயானி! அடடே இது செம சம்பவம்! குவியுது வாழ்த்து
சென்னை: நடிகை தேவயானி தன்னுடைய மகளோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. நடிகை தேவயானிக்கு இரண்டு மகள்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அதில் மூத்த மகள் இனியா சமீபத்தில் ஒளிபரப்பான ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
தன்னுடைய அப்பாவும் அம்மாவும் சினிமா துறையில் பல வருடங்களாக இருந்து வந்தாலும், தான் தன்னுடைய முயற்சியால் மக்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்று சரிகமப நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். முதல் வாரத்திலேயே ரசிகர்களின் நன்மதிப்பை பெற்று விட்டார்.

இனியா பாடிய, மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை கேட்டு, வாவ்.. இனியா குரல் இளையராஜாவின் மகள் பவதாரணியின் குரலை போல இருக்கிறதே என்று பலர் பாராட்டி வந்தனர். இனிமையான குரலுக்கு சொந்தக்காரி என்றும் பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர். தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சியில் ஹிட் பாடல்கள் கொடுத்து வந்த இனியா எப்படியும் டைட்டில் வின்னராக வாய்ப்பிருக்கிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
Devayani: பெண்கள் உடையில் கண்ணியம் வேண்டும்! நமக்குன்னு கலாச்சாரம் இருக்கு! ஓபனா பேசிய தேவயானி
ஆனால் கடைசியில் பைனலுக்கு இவர் தேர்வு ஆகவில்லை. இது அவருடைய ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் இனியா வந்த பிறகு சில விமர்சனங்களும் வந்தது. இனியா நடிகை தேவயானியின் மகள் என்பதால் அவரை ஒவ்வொரு வாரமும் செலக்ட் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சிலர் விமர்சித்து வந்தனர். அதெல்லாம் உண்மையே இல்லை இந்த நிகழ்ச்சியில் திறமையானவருக்கு தான் வாய்ப்பு இருக்கு என்று கடைசியில் சரிகமப டீம் காட்டிவிட்டனர்.
சரிகமப நிகழ்ச்சிக்கு பிறகு இனியா திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து இனியா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இன்னும் வரவில்லை. இந்த நிலையில் இப்போது விளம்பரங்களில் இனியா நடிக்க தொடங்கி இருக்கிறார். சில நகைக்கடை விளம்பரங்களில் இனியா நடித்து வந்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து இப்போது ஃபோட்டோ ஷூட் எடுத்திருக்கிறார். தன்னுடைய அம்மாவோடு அவர் எடுத்த புகைப்படங்கள் தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மணப்பெண் போல இனியா ஜொலிக்க, பக்கத்திலயே சந்தோஷமாக தேவயானியும் நின்று கொண்டிருக்கிறார். இந்த அம்மா மகள் காம்போ தான் இப்போது பலராலும் பாராட்டப்படுகிறது. இருவரும் சேர்ந்து திரைப்படங்களிலும் நடிங்க என்று பலர் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications