ஏ.ஆர்.ரஹ்மானை திருமணம் பண்ண ஆசைப்பட்டேன்! அத்தனை பேரு முன்னாடி அவர் சொன்ன வார்த்தை.. நடிகை மோகினி நெகிழ்ச்சி
சென்னை: தமிழ் சினிமாவின் 80-90களில் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த நடிகைகளில் ஒருவரான மோகினி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து பேசியிருக்கும் பேட்டி தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மோகினியின் பயணம்
1987ஆம் ஆண்டு ரகுவரன் நடித்த கூட்டுப்புழுக்கள் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் மோகினி. அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத்தந்தது.
இதன்பிறகு நாடோடி பாட்டுக்காரன், உனக்காக பிறந்தேன், உன்னை வாழ்த்தி பாடுகிறேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அவரது அழகான கண்கள் அவரின் மிகப்பெரிய பலமாக கருதப்பட்டன. அந்த காலத்தில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.
2007ஆம் ஆண்டு வெளியான குற்றப்பத்திரிகை படம் தான் அவர் நடித்த கடைசி தமிழ் படம். பின்னர் 2011ஆம் ஆண்டு மலையாளத்தில் Collector படத்தில் நடித்ததுடன் சினிமாவிலிருந்து விலகி விட்டார்.
ஏ.ஆர்.ரஹ்மான்
திலீப் குமார் என்ற பெயரில் பிறந்த ஏ.ஆர். ரஹ்மான், ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இந்திய சினிமாவின் இசை மொழியையே மாற்றியவர். இரண்டு ஆஸ்கர் விருதுகள், பல தேசிய விருதுகள், கிராமி விருதுகள் என உலகளவில் இந்திய இசையை உயர்த்தியவர். இசைக்காக இஸ்லாம் மதத்தைத் தேர்ந்தெடுத்து தனது பெயரை அல்லாஹ் ரக்கா ரஹ்மான் என மாற்றிக்கொண்டது அவரின் வாழ்க்கையில் முக்கியமான திருப்பமாகும்.

மோகினி உருக்கமான பேட்டி
இது குறித்து நடிகை மோகினி பேசியதாவது: "ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகையாக இருந்தேன். சாதாரணமாக ரசிகை அல்ல. அவர் மீது வெறித்தனமான அன்பில் இருந்தேன். அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியது எனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அப்போது நான் இந்துவாக இருந்தேன்.
திலீப் என்ற அவருடைய பெயரே எனக்கு போதுமானதாக இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் திலீப்பாகவே இருந்திருக்கலாம். அவர் மதம் மாறாமல் இருந்திருந்தால், 'எனக்கு அவரை பிடித்திருக்கிறது; அவரையே திருமணம் செய்துகொள்கிறேன்' என வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி சம்மதம் வாங்க வசதியாக இருந்திருக்கும்.
அவர் என்னை விட இளையவர் என்பது எனக்கு தெரியும். சண்டை, சச்சரவு இல்லாமல் திருமணம் செய்ய வேண்டும் என திட்டமிட்டிருந்தேன்." நான் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதும், அவர் மீது ஆசைப்படுவதும் ஒரு சிலருக்கு தெரியும். சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது லட்சுமி அம்மா நீ சீக்கிரமா பிரியாணி பண்ண கத்துக்கோ என்று கிண்டல் பண்ணுவாங்க.
ஒருமுறை அவர் கலந்து கொண்ட ஒரு வெளிநாட்டு நிகழ்ச்சியை நான் தான் தொகுத்து வழங்கினேன் அந்த நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் விமான நிலையத்தில் இருந்தோம். அப்போது அங்கு பல நடிகைகள் இருந்தனர். ஆனால் ஏ ஆர் ரகுமான் என்னிடம் நேரடியாக வந்து ஹாய் ஹலோ என்று சொல்லிவிட்டு போனாரு... அந்த நொடி எல்லோருமே என்னை பார்த்து திட்டிக் கொண்டிருந்தார்கள்.
நாங்கள் எத்தனை பேருக்கு இருக்கோம் ஆனா எங்களை விட உன்கிட்ட வந்து பேசிட்டு போறாருன்னு கேட்டாங்க. ஆனால் அப்போது நான் லக்கேஜை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தேன் அதனால் கூட அவர் என்னிடம் பேசி இருக்கலாம்... மத்தபடி எங்களுக்குள் எந்த காதலும் கிடையாது. ஒரு ஃபேன் கேர்ள் கிரேஸ் தான் என்று மோகினி ஓபன் ஆக பேசியிருக்கிறார் . இந்தக் கருத்துக்கள் தற்போது ரசிகர்களிடையே பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
ரஹ்மானின் தனிப்பட்ட வாழ்க்கை
ஏ.ஆர். ரஹ்மான் 1995ஆம் ஆண்டு சைரா பானுவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இசை, ஆன்மிகம், எளிமையான வாழ்க்கை முறை ஆகியவற்றுக்காக அறியப்படும் அவர், உலகம் முழுவதும் இந்திய இசையின் அடையாளமாக பார்க்கப்படுகிறார்.
ஒரு காலத்தில் ரசிகையாக இருந்தவர், தனது மனதில் இருந்த உணர்வை ஓபனாக பகிர்ந்துகொண்டிருப்பது தான் இந்த பேட்டியின் சிறப்பு. மோகினியின் இந்த உருக்கமான நினைவுகள், ரஹ்மானின் ஆரம்ப காலத்தை ரசிகர்கள் மீண்டும் நினைவுகூர செய்துள்ளன.
-
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
பெரிய தப்பு செய்த திரிஷா.. ஒரே ஒரு போட்டோவால் கொந்தளிப்பு.. இந்த நேரத்தில் இது தேவையா? வருத்தத்தில் ரசிகர்கள் -
காதலர் தினம் பட ஹீரோயினி சோனாலிக்கு வந்த சிக்கல்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன புகார்.. நடிகை கொடுத்த விளக்கம் -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்?












Click it and Unblock the Notifications