மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை விசித்ரா...என்னாச்சு அவருக்கு? இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு
சென்னை: தென்னிந்தியத் திரையுலகில் துணிச்சலான கதாபாத்திரங்கள் மற்றும் சிறந்த நடனத் திறமையால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை விசித்ரா. நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமான அவர், சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விசித்ராவின் இந்த இன்ஸ்டா பதிவு, ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தாலும், அவர் குணமாக வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
திரையுலகப் பயணம்
90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த விசித்ரா, திருமணத்திற்குப் பின் திரையுலகத்தை விட்டு விலகினார். குடும்ப வாழ்க்கையில் மூழ்கிய அவர், 20 ஆண்டுகளுக்குப் பிறகு 'குக் வித் கோமாளி', 'பிக்பாஸ் சீசன் 7' மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். முன்னதாக, பிக்பாஸ் வீட்டில் சினிமா கால கசப்புகளைப் பகிர்ந்தது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் விசித்ரா:
சமூக வலைதளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் நடிகை விசித்ரா, திடீரென இன்ஸ்டாகிராமில் தான் மருத்துவமனையில் அனுமதி ஆனது குறித்தும், அங்கு தான் செய்துகொண்ட அறுவை சிகிச்சை செய்ததையும் பகிர்ந்துள்ளார். விசித்ரா தனது இன்ஸ்டாகிராமில், "வலி நம் வாழ்வை கொஞ்சம் நிறுத்தலாம், ஆனால் மனித மனதின் வலிமையை அது நமக்கு காட்டுகிறது. ஒவ்வொரு தழும்பும் போராட்ட வெற்றிக் கதையைச் சொல்லும்" என அறுவை சிகிச்சைக்குப் பின் தன் உணர்வுகளை நெகிழ்ந்து பகிர்ந்துள்ளார்.
மருத்துவர்கள் மற்றும் குடும்பத்திற்கு நன்றி:
சென்னையில் MGM ஹெல்த்கேர் மருத்துவமனையில், டாக்டர் மொஹந்தி மற்றும் அவரது குழுவின் சிறந்த வழிகாட்டுதலால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்றும், இந்த கடின காலத்தில் தனக்கு வலிமையாக இருந்த கணவர், குடும்பத்தினர், நண்பர்களுக்கு மனதார நன்றி" என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், "அன்பும் ஆதரவும் சூழும்போது வலியில் இருந்து குணமடைவது எளிதாகிவிடுகிறது" என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
ரசிகர்கள் பதிவு:
இந்தப் பதிவுடன் மருத்துவமனையில் எடுத்த சில புகைப்படங்களையும் விசித்ரா பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து, "என்ன ஆச்சு மேடம்?" என விசாரிக்கின்றனர். அதேநேரம், "சீக்கிரம் குணமடையுங்கள் மேடம்" என வாழ்த்தி, ஹார்ட் எமோஜிகளை அனுப்பி வருகின்றனர். மேலும், அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர் விளக்கும் வீடியோவையும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications