வதந்திகளை கடந்து ரீ என்ட்ரி கொடுத்த பாக்யராஜின் மகள் சரண்யா.. செமையா மாறிட்டாங்களே! குவியும் வாழ்த்து
சென்னை: தமிழ் சினிமாவை தனித்துவமான திரைக்கதைகளாலும், இயல்பான மனித உறவுகளாலும் திரும்பிப் பார்க்க வைத்தவர் கே. பாக்யராஜ். நடிகர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களுடன் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதும் பேசுபொருளாக இருந்தவர். நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதிக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர்.
மகன் சாந்தனு தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், மகள் சரண்யா பாக்யராஜ் பல ஆண்டுகளாக எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் என்றே தெரியாமல் இருந்தார். இதனால் "சரண்யாவுக்கு என்ன ஆனது?" என்ற கேள்வி அவ்வப்போது ரசிகர்களிடையே எழுந்துகொண்டே இருந்தது.

சரண்யா பாக்யராஜ், தனது அப்பா இயக்கி தயாரித்த 'பாரிஜாதம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் பிருத்விராஜ் ஹீரோவாக நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானாலும், படம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. அதன் பிறகு சரண்யா வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. சினிமாவை விட்டு முழுமையாக விலகியதோடு, பொது நிகழ்ச்சிகள், மீடியா என எதிலும் அவர் தலைகாட்டாமல் இருந்தார்.
அந்த காலகட்டத்தில், சரண்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல வதந்திகள் வெளிவந்தன. காதல் தோல்வி, மன அழுத்தம் காரணமாக அவர் கடுமையான நிலைமைகளை சந்தித்ததாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இதுகுறித்து பாக்யராஜ் தரப்பிலோ, சரண்யா தரப்பிலோ எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் சரண்யா குறித்த மர்மம் மேலும் அதிகரித்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு யூடியூப் சேனலுக்கு சரண்யா பேட்டி அளித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. அந்த பேட்டியில், தனக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாகவும், அந்த குழந்தை தான் தங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சியை கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் திருமணம், கணவர் யார் என்பது போன்ற விவரங்களை அவர் வெளிப்படையாக கூறவில்லை. தற்போது அவர் வீட்டிலிருந்தபடியே காஸ்ட்யூம் டிசைனர் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தனது அம்மா பூர்ணிமாவுடன் சரண்யா கலந்து கொண்ட நிகழ்ச்சியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. "இது தான் பாக்யராஜ் மகளா?" என்று பலர் ஆச்சரியப்பட்டார்கள்.
இந்த நிலையில் தான், சரண்யா பாக்யராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் பூ வைத்தபடி மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளாக வெளியில் தெரியாமல் இருந்த சரண்யா, இவ்வளவு பாசிட்டிவாகவும் அமைதியாகவும் இருப்பதை பார்த்த ரசிகர்கள், "சரண்யாவா இது?", "இவ்வளவு நாட்களுக்கு பிறகு பார்க்க சந்தோஷமா இருக்கு" என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மொத்தத்தில், கே. பாக்யராஜ் மகளாக மட்டுமல்ல, ஒரு காலத்தில் நடிகையாக அறிமுகமான சரண்யா பாக்யராஜ், பல வருட இடைவெளிக்குப் பிறகு சோசியல் மீடியாவில் தன்னை காட்டிய இந்த ஒரு வீடியோவாலேயே மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறார். சினிமாவுக்கு திரும்புவாரா, இல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலேயே தொடர்ந்து இருப்பாரா என்ற கேள்விகள் இருந்தாலும், இப்போது ரசிகர்கள் சொல்லுற ஒரே விஷயம் - "சரண்யா நலமாக, மகிழ்ச்சியாக இருக்கிறார்... அதுவே போதும்." என்பதுதான்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications